

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இதன் சில முக்கிய அம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. OnePlus நிறுவனத்திடம் இருந்து வெளிவரத் தயாராகும் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மொபைலில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.
அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகிய மாடல்களை வரும் வாரத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குப் பின், நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆகிய இரண்டு நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 11 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, OnePlus Nord 3 விபரங்கள் மற்றும் ரெண்டர் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சிப்செட்
இதன்படி, ஒன்ப்ளஸ் வெளியிடவிருக்கும் புதிய OnePlus Nord 3 மாடல், கடந்த ஆண்டு வெளியான OnePlus Nord 2T மாடலின் வாரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது MediaTek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
திரை
OnePlus Nord 3 மொபைல் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K தெளிவுத்திறன் கொண்ட 6.74 அங்குல AMOLED டிஸ்ப்ளேவை வழங்கும். ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் இன் கீழ் உயர் தெளிவுத்திறன் டிஸ்ப்ளே இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது தெளிவாகிறது.
கேமரா
அதேபோல், இந்த போனின் லீக்கான ஸ்கெட்ச்சிங்க் படி, இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் கேமரா அமைப்பு Nord 2T போன்றே தெரிகிறது. இந்த போனின் பிரைமரி கேமரா விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இது 64MP ஆம்னிவிஷன் சென்சார் அல்லது 50MP Sony IMX890 சென்சாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP லென்ஸ் இணைக்கப்படலாம் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது.
பேட்டரி
OnePlus Nord 3 ஆனது 5000mAh பேட்டரியை 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட முதல் Nord பிராண்டட் ஸ்மார்ட்போனும் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. OnePlus Nord 2 மற்றும் OnePlus Nord 2T ஆகியவை முறையே 65W மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் மட்டும் வருகிறது.
இயங்குதளம்
அதேபோல், இந்த ஒன்பிளஸ் நார்ட் 3 மொபைல் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 13 உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பிராண்டிற்கு பிரத்தியேகமான அலெர்ட் ஸ்லைடர் பட்டனையும் நார்ட் டிவைஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 1.5K AMOLED டிஸ்பிளே மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது என்றால், இந்த போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.






