
கடந்த வாரம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தி இருந்தது. ஏனென்றால் இது ரூ.18,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.
டிஸ்பிளே
டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் (@ஆன்லீக்ஸ்) வழியாக கிடைத்த தகவல்களின்படி, மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.72 அங்குல ஃபுல் எச்டி+ அமோஎல்இடி (FHD+ AMOLED) டிஸ்ப்ளே இருக்கும்.
ஸ்டோரேஜ் மற்றும் ப்ராசஸர்
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனானது 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைந்து ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் (Octa-core Snapdragon 782G chipset) மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா
OnePlus Nord CE 3 கேமரா கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 மாடலில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கதத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் டிசைனில் 16எம்பி செல்ஃபி கேமரா இடம்பெறலாம்.
பேட்டரி
இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும், அது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி
இதுதவிர டூயல்-பேண்ட் வைஃபை, 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பிஐ டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் இடம்பெறலாம்.
விலை
பெரும்பாலும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி மாடலானது ரூ.25,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாகவே அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் ரூ.24,999 ஆக இருக்கலாம். இது 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலையாக இருக்கலாம்.
வெளியீடு
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு 2023 ஆம் ஆண்டின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்கு இடையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து எந்த விதமான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ஜூலை 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.