
108MP கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியோடு ஒன்ப்ளஸ் தரப்பில் இருந்து ஒரு 5ஜி போன் வெளியாக இருக்கிறது!
ஷாவ்மி, விவோ நிறுவனங்களை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் குறைந்த விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சிப்செட்
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறனை வழங்கும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும்.
ஸ்டோரேஜ் வசதி
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது.
டிஸ்பிளே
இந்த புதிய ஒன்பிளஸ் போன் 6.7 அங்குல ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
கேமரா
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
பாஸ்ட் சார்ஜிங்
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப் பட்டு இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். இது தவிர பாதுகாப்புக்கு என கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கும்.
கனெக்டிவிட்டி
இது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனத் தெரிவந்துள்ளது. இது மக்களிடையே இந்த மொபைலைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது.