

இந்தியாவில் OnePlus Nord CE 3 Lite மற்றும் Nord Buds 2 TWS இயர்பட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் OnePlus 11 மற்றும் OnePlus Buds Pro 2 ஆகிய ஃப்ளாக்ஷிப் மாடல்களுக்குப் பிறகு இந்த மிட்-ரேஞ்ச் போனை Oneplus வெளியிட்டு இருக்கிறது. Nord CE 3 Lite ஆனது கடந்த வருடத்தில் வெளியான Nord CE 2 Lite இன் தொடர்ச்சியாகும். இந்த Nord CE 3 Lite ஆனது கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு முக்கியத்துவம் தந்து வெளியாகி இருக்கிறது. Nord CE 3 Lite ஆனது சற்று பெரிய 6.72 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 SoC மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
விலை & விற்பனை
OnePlus Nord CE 3 Lite இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அதில் 8GB/128GB வேரியண்ட் ரூ.19,999 என்ற விலைக்கும், 8GB/256GB வேரியண்ட் ரூ.21,999 என்ற விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல் பாஸ்டல் லைம் மற்றும் க்ரோமாடிக் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போனின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது.
சலுகைகள்
ஐசிஐசிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு, EMI மற்றும் நெட் பேங்கிங் ஆகியவற்றில் ரூ.1,000 வங்கி தள்ளுபடி உள்ளது. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 வரை, ஆரம்ப சலுகையாக OnePlus குடீஸ் மற்றும் OnePlus wearables மீது சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர இரண்டு மாத YouTube பிரீமியம், மற்றும் ஆறு மாத Spotify பிரீமியம் ஆகியவை வெளியீட்டுச் சலுகையாகக் கிடைக்கும்.
அதேவேளையில், Nord Buds 2, Amazon மற்றும் OnePlus இணையதளம் வழியாக ரூ.2,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கும்.
OnePlus Nord CE 3 Lite விவரக்குறிப்புகள்
- 6.72 அங்குல FHD+ IPS LCD 120Hz டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்
- 108MP + 2MP + 2MP டிரிபிள் கேமராக்கள்
- 16MP செல்ஃபி ஷூட்டர்
- 5,000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங்
டிஸ்ப்ளே
OnePlus Nord CE 3 Lite ஆனது, 120Hz புதுப்பிப்பு வீதம், 1080 X 2400 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.72 அங்குல FHD+ IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் செல்ஃபி ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட், 20:9 விகிதம், 91.40 சதவிகிதம் திரை விகிதம், 1500:1 மாறுபாடு விகிதம், 240Hz தொடு மாதிரி வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் மற்றும் 680நிட்ஸ் உச்ச பிரகாசம் போன்ற அம்சங்களும் உள்ளன. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.
மெமரி & பேட்டரி
OnePlus Nord CE 3 Lite ஆனது Qualcomm Snapdragon 695 SoC மூலம் Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB/256GB UFS 2.2 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Oxigen OS custom skin மூலம் இயங்குகிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இவைதவிர, 67W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது.
கேமரா
OnePlus Nord CE 3 Lite ஆனது 108MP சாம்சங் HM6 ப்ரைமரி சென்சார், 6P லென்ஸ், EIS, LED ஃபிளாஷ் அம்சங்களோடு இருக்கிறது. இது தவிர f/1.75 அப்பச்சர் கொண்ட 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் உள்ளது.
OnePlus Nord Buds 2 விவரக்குறிப்புகள், அம்சங்கள்
OnePlus Nord CE 3 Lite உடன், OnePlus இந்தியாவில் Nord Buds 2 ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இயர்பட்கள் BassWave TM அல்காரிதத்துடன் வருகிறது, இது ஆடியோ தரத்தை அதன் அசல் தரத்திற்கு இணையாகத தருகிறது. கூடவே, சிறந்த Bass-ஐ வெளிப்படுத்துகிறது. Nord Buds 2 ஆனது 12.4mm ட்ரைவரைக் கொண்டுள்ளது. இது அதிக காற்றோட்டத்தை அனுமதிப்பதன் மூலம் பேஸ் தரத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் இருக்கும் கூடுதல் டைட்டானிய லேயர் காரணமாக அதிர்வுறும் டயஃப்ரம் சிறந்த, மேம்பட்ட ஆடியோவை வழங்குகிறது.
OnePlus Nord Buds 2 ஆனது தேவையற்ற பின்னணி இரைச்சலைக் குறைக்க 25dB டெப்த் மற்றும் டூயல்-கோர் செயலியுடன் கூடிய ஆக்டிவ் நோஸ் கேன்சல்லேஷன் அம்சத்தைக் கொண்டுள்ளது. TWS இயர்பட்ஸ் மேம்பட்ட தெளிவான அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது. இது தெளிவான ஆடியோ அழைப்புகளுக்கான AI அல்காரிதம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. கூடுதலாக, குரலின் சத்தததை அதிகரிக்க இரட்டை மைக் அமைப்பு உள்ளது. TWS நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP55 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது.
OnePlus Nord Buds 2 ஆனது AAC (Advanced Audio Coding), Dolby Atmos மொபைல் மற்றும் Dirac Tuner ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இயர்பட்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளன. இதன் மூலம் 10 நிமிடங்கள் இயர்பட்ஸை சார்ஜ் செய்தால் 5 மணிநேரம் பயன்படுத்த முடியும். கேரி கேஸூம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. Nord Buds 2 கேஸ் இல்லாமல் 5 மணிநேரம் வரை நீடிக்கும் என்றும், கேரி கேஸ் மற்றும் AAC மற்றும் ANC இயக்கப்பட்டிருந்தால் 27 மணிநேரம் வரை நீடிக்கும் என்றும் OnePlus கூறுகிறது.









