ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தது.

சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு இதன் முந்தைய மாடலைப் போன்றே மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போனை சார்ஜ் செய்யும் நேரம் நிமிடங்களிலேயே இருக்கும். இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி நீட்டிப்பு

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன்மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கனெக்டிவிட்டி

புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.