Home News Snapdragon 695 மற்றும் 8GB RAM உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது OnePlus Nord N30 5G

Snapdragon 695 மற்றும் 8GB RAM உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது OnePlus Nord N30 5G

Highlights
  • OnePlus Nord N30 5G ஆனது சிங்கிள்-கோர் ரவுண்டில் 888 மதிப்பெண்களையும், மல்டி-கோர் பிரிவில் 2076 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
  • ஒன்பிளஸ் போன் 8 ஜிபி ரேம் &  ஸ்னாப்டிராகன் 695 SoC உடன் வருமென கீக்பெஞ்ச் பட்டியல் காட்டுகிறது.
  • OnePlus Nord N30 என்பது அமெரிக்காவிற்கான மறுபெயரிடப்பட்ட OnePlus Nord CE 3 Lite 5G ஆகும்.

 

OnePlus Nord N30 மொபைல் பற்றி சமீப காலமாக பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனையடுத்து தற்போது FCC சான்றிதழில் காணப்பட்ட பிறகு, இந்த போன் Geekbench இல் தோன்றியுள்ளது . இந்த கைபேசியானது அமெரிக்க சந்தைக்கான OnePlus Nord CE 3 Lite இன் மறுபெயரிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

OnePlus Nord N30 5G விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே

OnePlus Nord N30 5G ஆனது 1080 X 2400 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.72-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், செல்ஃபி ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட், 20:9 விகிதம், திரை-91 சதவீதம். உடல் விகிதம், 240Hz தொடு மாதிரி வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் மற்றும் 680நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும்

 

சிப்செட்

இந்த ஒன்பிளஸ் மொபைலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது கிராபிக்ஸிற்காக Adreno 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

ரேம் & சேமிப்பு  

கைபேசியில் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128GB/256GB UFS 2.2 சேமிப்பகம் உள்ளது.

 

OS

OnePlus Nord N30 5G ஆனது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OxygenOS ஸ்கின் கொண்டு கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட இயங்குதளத்தில் செயல்படுகிறது

 

கேமராக்கள்

OnePlus Nord N30 ஆனது f/1.75 அபெர்ச்சர் கொண்ட 108MP சாம்சங் HM6 முதன்மை சென்சார், 6P லென்ஸ், EIS, LED ஃபிளாஷ் மற்றும், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் உள்ளது.

 

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டியைப் பொருத்தவரை 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.

 

பேட்டரி

இந்த நோர்ட் என்30 போன் 67W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

OnePlus Nord N30 5G முக்கிய விவரக்குறிப்புகள்