
பெஸ்ட்டா, ட்ரெண்டிங்கா, சிறப்பான அம்சங்களோட ஒரு ஸ்மார்ட்வாட்ச் வாங்க ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்குத் தான். குறைந்த விலையில் OnePlus இடமிருந்து ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வெளிவரப் போகிறது. அதுவும் மிக விரைவில்.
சமீபத்தில் வெளியான வதந்திகளின்படி, OnePlus நிறுவனம் புதிதாக OnePlus Nord Watch என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் செவ்வக டயல் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்கிரீன்ஷாட் மூலம் வெளியான தகவல்..
இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் ஒன்ப்ளஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு N Health பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்றும் சமீபத்திய தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த OnePlus Nord Watch டிவைஸ் உடன் வரும் பல வாட்ச் பேஸ் மாடல்கள், ஸ்மார்ட் வாட்சின் அம்சங்கள் மற்றும் ஹெல்த் மானிட்டரிங் அம்சங்களைக் காட்டும் என்பது ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
BIS தரவுத்தளத்தில் காணப்பட்ட புது ஒன்பிளஸ் வாட்ச் இது Nord பிராண்டிங் கீழ் வெளிவரும் காரணத்தினால், இந்த புதிய OnePlus ஸ்மார்ட்வாட்ச் கட்டாயம் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் இந்தியத் தரநிலைகள் (BIS) தரவுத்தளத்தில் ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதால், இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் துணை பயன்பாட்டிலிருந்து சில ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் ஒரு குறிப்பிட்ட N Health ஆப்ஸுடன் செவ்வக டயலை உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, டிப்ஸ்டர் தகவல் ஆறு வெவ்வேறு வாட்ச் பேஸ் மாடல்களையும் பகிர்ந்துள்ளது. Personalised செய்யப்பட்ட வாட்ச் பேஸ்களை பயன்படுத்தும் ஆப்ஷன்களோடு, அதிகமான வாட்ச் பேஸ்களையும் நிறுவனம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய Nord பிராண்டட் வாட்ச்சில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
புதிய ஒன்பிளஸ் நார்ட் வாட்சுக்கான அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் SpO2, இதயத் துடிப்பு மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் என்று லீக் தகவல் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்சின் தொடர் உற்பத்தி சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் தொடங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. மார்ச் 2021 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்சிற்கு, இந்த புதிய Nord பிராண்டட் வாட்ச்கள் கட்டாயம் குறைந்த விலை மாற்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
OnePlus Nord வாட்ச் என்ன விலை?
OnePlus Nord வாட்ச் இந்தியாவில் ரூ.5,000 முதல் ரூ.8,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று சமீபத்திய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய நார்ட் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ், 2022 ஆம் ஆண்டில் OnePlus Nord 3 உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மாடல், OPBBE221 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இது முன்னர் BIS இந்தியா தரவுத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை டிப்ஸ்டர் தகவல் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு துவக்கத்தில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸை OnePlus நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
