முன்னணியில் இருக்கும் ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்று. ஆப்பிளுக்கு இணையான புகழைக் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பண்டிகையை முன்னிட்டு தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
OnePlus Nord CE 2 Lite 5G
OnePlus Nord CE 2 Lite 5G ஸ்மார்ட்போனானது மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில், 6.59 அங்குல திரை, 120 ஹெர்ட்ஸ் IPS LCD பேனல் இடம்பெற்றுள்ளது. இது 60 எம்பி டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 என கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உட்பட கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 என கிடைக்கிறது.
OnePlus Nord CE 2 5G
ரூ.30,000 விலைப் பிரிவில் விற்கப்பட்ட OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.24,998 என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது. க்ரே மிரர், பஹாமாஸ் ப்ளூ ஆகிய நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6.45 அங்குல, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 64 எம்பி பிரதான கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
OnePlus 10R 5G
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது. 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ரூ.38,999க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.32,999க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், 6.7 அங்குல 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் கொண்ட டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது.

OnePlus 10 Pro 5G
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.71,999க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.66,999 என கிடைக்கிறது. பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுவாகும். 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் லென்ஸ், 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 8 எம்பி டெலி போட்டோ லென்ஸ் என்ற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.







