A சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யும் ஒப்போ

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் விரைவில் புதிய Oppo A Series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒப்போ ஏ-சீரிஸ்

இந்த ஒப்போ ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று போன்கள்

அதேபோல் இந்த ஒப்போ ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது. குறிப்பாக ஏ-சீரிஸ்-இல் மொத்தம் மூன்று போன்கள் அறிமுகமாகும் என்றும், அனைத்துமே உயர்-ரக அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ ஏ-சீரிஸ் போன்கள் வளைந்த டிஸ்ப்ளே, 160Hz பல்ஸ்-விட்த் மாட்யுலேஷன் டிம்மிங் வசதி கொண்டுள்ளன. இவை ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆகாமல் பார்த்துக் கொள்வதோடு சீரான டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ17

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சிப்செட்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

கேமரா

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்புறத்தில் 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது.

பேட்டரி

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதோடு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது.