Home News 108MP கேமராவோடு அறிமுகமானது ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

108MP கேமராவோடு அறிமுகமானது ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி (Oppo A1 Pro 5G) என்ற ஸ்மார்ட்போனை ஒப்போ நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி

ஆனால் தற்போது இந்த புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799 (இந்திய மதிப்பில் ரூ.20,600) ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போனின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ.23,000) ஆக உள்ளது. வரும் நவம்பர் 25-ம் தேதி ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி போன் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது.

டிஸ்ப்ளே

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் 1,080×2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிப்செட்

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களோடு வெளியாகி இருக்கிறது.

மெமரி

ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி என இரண்டு வகை ஸ்டோரேஜ் வசதிகளில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மொபைல் Dawn Gold, Moon Sea Black மற்றும் Zhaoyu Blue நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி

புதிய ஒப்போ ஏ1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 4800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

கனெக்டிவிட்டி

5ஜி மொபைலான இந்த ஒப்போ ஏ1 ப்ரோவில், 5G, 4G எல்டிஇ, கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், வைஃபை 5, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.