ஒப்போவிடம் இருந்து ஒரு மிட் ரேஜ் போன்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் ஒப்போ நிறுவனத்தின் A77 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘ஏ’ சீரிஸ் போன்களில் ஒன்றான A77 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  • இதில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • புகைப்படங்களை எடுக்க 50MP முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்போ A77 மாடலில் 6.56 அங்குல IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்புத்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் சேமிப்புத்திறனை micro SD கார்டு மூலமாக நீட்டிக்கும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கலர் ஓ.எஸ். 12.1 கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 33W சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP முதன்மை கேமரா, 2 MP மேக்ரோ / டெப்த் சென்சார், LED பிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ A77 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ A77 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. போனை வாங்கும்போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெறவும் முடியும்.

இந்த போனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 6.56 இன்ச் திரை அளவு கொண்ட வாட்டர் நாட்ச் ஸ்டைல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். இதன் ரெப்ரெஷ் ரேட் 60Hz.
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 SoC சிப்செட் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்ன்ஸ் ஸ்டோரேஜ் திறனை இந்த போன் கொண்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.
  • பின்புறத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • 5000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது. 33 வாட்ஸ் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த போன்.
  • 4ஜி இணைப்பில் இயங்கும் இந்த போனின் விலை ரூ.15,499.