Home News 5 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கும் ஒப்போ

5 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் வழங்கும் ஒப்போ

சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் வரிசையில் ஒப்போ நிறுவனமும் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்க இருக்கிறது.

ஒப்போ வெளியிட இருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு மிக முக்கிய கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை ஒப்போ நிறுவனம் தனது கலர்ஒஎஸ் மைக்ரோசைட்-இல் வெளியிட்டு இருக்கிறது. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு கலர்ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், இந்த மாடல்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்க ஒப்போ முடிவு செய்து இருக்கிறது. இந்த அப்டேட் வழங்கும் நடைமுறை ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு பொருந்தாது. எனினும், எதிர்காலத்தில் வெளியாகும் தேர்வு செய்யப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த அப்டேட் முறை பொருந்தும்.

கலர்ஒஎஸ் 13

அந்த வகையில், ஒப்போ நிறுவனத்தின் தற்போதைய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒப்போ ஃபைண்ட் X5, ஃபைண்ட் X5 ப்ரோ மற்றும் இதர மாடல்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. இந்த ஆகஸ்ட் மாதம் வெளியான கலர்ஒஎஸ் 13 உலகளவில் ஒப்போ விற்பனை செய்த 33 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய வசதிகள்

இது வேகமான மற்றும் மிகப்பெரிய கலர்ஒஎஸ் அப்டேட் ஆகும். கடைசியாக ஒப்போ வெளியிட்ட கலர்ஒஎஸ் அப்டேட் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் எளிமை மற்றும் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கலர்ஒஎஸ் 13 அப்டேட் மென்மையான, அதிக இயற்கையாக, அழகான அனிமேஷன்கள் நிறைந்து இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய அக்வாமார்ஃபிக் டிசைன், ஸ்மார்ட் AOD, மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதனிடையே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அன்துது வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் PBH110 மாடல் கோட் கொண்டிருந்த ஸ்மார்ட்போன் 1.3 மில்லியனுக்கும் அதிக புள்ளிகளை பெற்று அசத்தியது. தற்போது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அம்சங்கள் TENAA வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அம்சங்கள்

அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 11 மாடலில் 6.7 அங்குல QHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எட்டு கோர்கள் கொண்ட சிபியு- அதாவது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி, 16 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மெமரி, 4870 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 8.53mm தடிமனாக இருக்கும் ஒன்பிளஸ் 11 ஒட்டுமொத்தத்தில் 205 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் 5ஜி சப்போர்ட் உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம். முந்தைய டீசர்களிலேயே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாட் கேமரா டியுனிங், அலெர்ட் ஸ்லைடர் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்தது.