அறிமுகமானது ஒப்போ ப்ரீமியம் இயர்பட்ஸ்


ஒப்போ என்கோ எக்ஸ் 2 (Oppo Enco X2) வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறத் தேர்வுகளில் வருகிறது.

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் போது, அத்துடன் அதன் ப்ரீமியம் இயர்பட்ஸையும் வெளியிட்து. ஒப்போ என்கோ எக்ஸ் 2 (Oppo Enco X2) என பெயரிடப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸை போன்ற வடிவமைப்பைக் கொண்டுடிருக்கிறது. 11mm டைனமிக் டிரைவர் (Dynamic driver) மற்றும் 6mm பிளானர் டயபிராம் டிரைவர் ஆகிய டிரைவர்களை கொண்டுள்ளது.

இதுதவிர ப்ளூடூத் 5.2, மல்டிபிள் நாய்ஸ் கேன்சலேசன் லெவல் (multiple noice cancellation) , 3 மைக்ரோபோன்கள், Type C USB port, வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் என எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது.

40 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது. ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸின் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறத் தேர்வுகளில் வருகிறது. வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.