
Oppo F23 5G விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 2021 இல் வந்த Oppo F21 மொபைலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கலாம். இந்த மிட் பட்ஜெட் போன் மே 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால் இந்த போன் குறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. செயலி, டிஸ்பிளே, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் உட்பட போனின் சில அம்சங்கள் வெளியாகியுள்ளன. ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்படலாம்.
Oppo F23 5G வெளியீட்டு தேதி
Oppo F23 5G இன் ஸ்டாண்டர்ட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் முகுல் ஷர்மா கூறியுள்ளார். கசிவுகளின்படி , இந்த போன் மே 15 அன்று இந்திய சந்தையில் வரக்கூடும், எனவே டீசரை விரைவில் நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் காணலாம். நித மொபைல் கோல்டு மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம்.
Oppo F23 5G (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்
- 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு
- 64எம்பி டிரிபிள் ரியர் கேமரா
Oppo F23 சீரிஸ் அதன் வடிவமைப்பில் ஒரு பெரிய மேம்படுத்தலைப் பெறலாம். பழைய மாடல்களுடன் ஒப்பிடும்போது போனின் கேமரா சற்று வித்தியாசமாக இருக்கலாம். இந்த சீரிஸில் Oppo Reno 8T போன்ற கேமரா அமைப்பைப் பெற முடியும். Oppo F23 5G ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். இந்த ஒப்போ போன் 128ஜிபி சேமிப்பு வேரியண்டிலும் வரலாம்.

போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இது 64MP மெயின் கேமராவைப் பெறுகிறது, 2MP டெப்த் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32MP கேமராவைப் பெறும்; இது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவில் பொருத்தப்படும். போனின் பின்புறம் எல்இடி ஃபிளாஷ் லைட்டிங் இருக்கும். இதன் மெயின் கேமரா OIS வசதியைக் கொண்டிருக்கலாம். அதாவது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் அம்சம்.
Oppo F23 Pro அறிமுகத் தேதி
ஊடக அறிக்கைகளின்படி, இந்த Oppo ஃபோன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறலாம். இது 5,000mAh Li-ion பேட்டரியையோடு வெளிவர வாய்ப்புள்ளது. Oppo F23 உடன் F23 Pro 5G மொபைலும் மே 15 அன்று அறிமுகப்படுத்தப்படலாம். ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது pro மாடலின் அம்சங்கள் சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு போன்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கலாம்.







