OPPO Find N3 ஆனது 3C சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. 100W சார்ஜிங் வசதியோடு வருவது உறுதியானது

Highlights

  • OPPO Find N3 மாடல் எண் PHN1100 உடன் காணப்பட்டது.
  • OPPO Find N3 ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் உறுதிப்படுத்துகிறது.
  • OPPO Find N3 இந்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

OPPO Find N3 சமீபத்தில் பிராண்டால் டீஸ் செய்யப்பட்டது. இந்த மொபைல் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OPPO Find N3 முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று யூகங்கள் உள்ளன. மேலும் இது ‘OnePlus Open’ பிராண்டிங்கின் கீழ் மற்ற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்நிலையில், OPPO Find N3 ஆனது சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. மேலும் இது ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் விவரங்களை வெளிப்படுத்துகிறது.

OPPO Find N3 3C சான்றிதழ்

  • PHN1100 என்ற மாதிரி எண்ணை போன் கொண்டிருக்கும் என்று சீனா 3C சான்றிதழ் காட்டுகிறது.
  • OPPO Find N3 ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் உறுதிப்படுத்துகிறது. இது சந்தையில் வேகமாக சார்ஜ் செய்யும் ஃபோல்டபிள் போன்களில் ஒன்றாகும்.
  • ஒப்பிடுகையில், முதல் OPPO Find N ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்தது. அதைத் தொடர்ந்து Find N2 இல் 66W சார்ஜிங் உடன் வந்தது.
  • இரட்டை USB-A/USB-C பிளக்குகள் கொண்ட VCB7CACH சார்ஜருடன் இந்த மொபைல் வெளியாகும்.
  • அடாப்டர் 100W ஐ ஆதரிக்கும். அதேவேளையில் ஒவ்வொரு போர்ட்டும் (USB-A/USB-C) 50W வழங்கும். இந்த போல்டபிள் போன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும் என்று முந்தைய வதந்திகள் கூறுகின்றன.
OPPO-Find-N3-3C

OPPO Find N3 விவரக்குறிப்புகள் (வதந்தி)

  • டிஸ்ப்ளே : OPPO Find N3 ஆனது 6.5-இன்ச் AMOLED FHD+ 120Hz கவர் ஸ்கிரீனை கொண்டிருக்கும். ஒரு பெரிய 8-இன்ச் AMOLED 2K 120Hz ஃபோல்டிங் டிஸ்ப்ளே இருக்கலாம்.
  • சிப்செட் : இந்த போல்டபிள் போன் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ரேம் மற்றும் சேமிப்பு : சிப்செட் 16GB LPDDR5x ரேம் மற்றும் 512TB UFS 4.0 சேமிப்பகத்துடன் இணைக்கப்படலாம்.
  • பேட்டரி : OPPO Find N3 ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,805mAh பேட்டரியை பேக் செய்யும்.
  • OS : OPPO Find N3 ஆனது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான ColorOS 13.1 கஸ்டமைஸ்டு ஸ்கின்னில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேமராக்கள் : கேமராக்களைப் பொறுத்தவரை, Find N3 ஆனது 50MP Sony IMX890 பிரதான கேமரா, 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என வதந்தி பரவுகிறது.
  • முன் கேமரா : OPPO Find N3 மொபைல் 32MP முன் கேமரா மற்றும் மற்றொரு 20MP அல்லது 32MP முன்பக்கக் கேமராவைக் கொண்டிருக்கலாம்.