Home News OPPO Find X6 சீரிஸ் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும் என விளம்பர போஸ்டர் வெளியாகி இருக்கிறது

OPPO Find X6 சீரிஸ் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும் என விளம்பர போஸ்டர் வெளியாகி இருக்கிறது

Highlights
  • OPPO Find X6 தொடரின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது
  • இந்த சீரிஸில், OPPO Find X6 மற்றும் Find X6 Pro மாடல்கள் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும்.
  • OPPO விளம்பர போஸ்டரில் இந்த போனின் வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது

 

OPPO Find X6 சீரிஸ்ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இப்போது ஒப்போ நிறுவனம் இந்த ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. Oppo Find X6 தொடர் அடுத்த மாதம் மார்ச் 21, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று சீனாவின் சோசியல் மீடியா ஹேண்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய அறிமுகம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த போன் விரைவில் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கும் வரும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

 

OPPO Find X6 சீரிஸில் வெளியாகும் போன்கள்

OPPO Find X6 சீரிஸில், OPPO Find X6, OPPO Find X6 Pro மற்றும் OPPO Find X6 Lite மாடல் போன்கள் வரக்கூடும். வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் போது கூடவே OPPO Find X6 சீரிஸ்க்கான விளம்பர போஸ்டர் மற்றும் வீடியோவையும் OPPO வெளியிட்டுள்ளது. இது மொபைலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

 

மேலே உள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்படுவது போல், Oppo Find X6 தொடர் சீனாவில் மார்ச் 21 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 14:00 மணிக்கு (காலை 11:30 IST) அறிமுகப்படுத்தப்படும். அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த மொபைலோடு கூடவே, Oppo Pad 2 வரும் என்று நம்பப்படுகிறது. இந்த போஸ்டரில் பெரிஸ்கோப் கேமராவிற்கான ஸ்லாட் தெளிவாகக் காணப்படுகிறது. இது 100x ஜூம் வரை வழங்கக்கூடியது. மேலும், மொபைலின் கேமரா தொகுதியைச் சுற்றி ஒரு பெரிய வளையம் இருக்கும். மொபைலின் பின்புறத்தில் இருக்கும் லெதர் ஃபினிஷிங் தெரிகிறது. இதோடு கூடவே, ஒரு விளம்பர வீடியோவில் கேமரா தொகுதியின் நடுவில் ஹாசல்பிளாட் பிராண்டிங்கின் லோகோ காணப்படுகிறது.

இது தவிர, பிராண்ட் ஒரு விளம்பர வீடியோ மூலம் மொபைலின் ‘நைட் கேமரா’வின் திறன்களை டீஸ் செய்துள்ளது. OPPO Find X6 Pro ஆனது சிறந்த மூன் ஷாட்களை எடுப்பது மட்டுமல்லாமல், ஷாட்டில் உள்ள மற்ற பொருள்கள் மற்றும் மனிதர்களையும் சிறந்த முறையில் படமெடுக்கும்.

 

Oppo Find X6 Pro (கசிந்த) அம்சங்கள்

OPPO Find X6 Pro ஆனது 6.8 அங்குல அளவில் 2K 120Hz புதுப்பிப்பு வீத AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வழங்கப்படும். கேமரா விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், 50MP + 50MP + 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 32MP செல்ஃபி ஸ்னாப்பர் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கடைசியாக, USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டில் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியை இந்த மொபைல் கொண்டு இருக்கும்.