மிட் ரேஞ் ஸ்மார்ட்போனான Oppo Reno 7 5G இப்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த பெஸ்டான Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவு வேகமாக குறையுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையை சொல்லப் போனால், இதில் இருக்கும் அம்சங்களுக்கு இதை நீங்கள் வெறும் 11,499 ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்காது என்றாலும், நீங்களும் அதில் ஒருவராக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அசல் விலை
இப்போது எப்படி இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம். Oppo Reno 7 5G மாடலானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டிற்கு உரியது. இந்த மொபைல் இப்போது இந்தியாவில் ரூ. 37,990 என்ற விலையில் கிடைக்கிறது.
விலை குறைப்பு
இப்போது பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடியுடன் இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.28,999 என்ற விலையில் வாங்க முடியும். இதன் மீது இப்போது 23% தள்ளுபடி கிடைக்கிறது. இது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய பொதுவான சலுகையாகும். இத்துடன் குறிப்பிட்ட சில கூடுதல் சலுகையையும் நீங்கள் இப்போது பயன்படுத்தலாம்.
சலுகை
குறிப்பாகக் குறிப்பிட்ட சில வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையைப் பயன்படுத்தும் போது இதன் விலை இன்னும் அதிகமாகக் குறைகிறது. Oppo Reno 7 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ் சலுகை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இந்த சலுகையில் மூலம் உங்களால் Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலையில் இருந்து ரூ. 17,500 வரை விலை குறைப்பைப் பெற முடிகிறது. இதன் மூலம் இந்த Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.11,499 என்ற விலையில் வாங்க முடிகிறது. உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் இருந்தால் போதும், உங்களால் இப்போது Oppo Reno 7 5G ஸ்மார்ட்போனின் விலையை முடிந்த வரை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்சேஞ் சலுகை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்சேஞ் சலுகை மதிப்பானது அதிகப்படியாகக் கிடைக்கும் மதிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. உங்களிடம் இருக்கும் போனின் நிலையை வைத்து எக்ஸ்சேஞ் வேல்யூ நிர்ணயிக்கப்படும். Oppo Reno 7 5G மீது கிடைக்கும் வங்கி சலுகைகளைப் பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் குறிப்பிட்ட 5 வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ரூ.2,500 வரை தள்ளுபடியை வழங்குகிறது.
எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்காதவர்களுக்கு, வங்கி சலுகைகள் கைகொடுக்கும். எப்போதும் பழைய ஸ்மார்ட்போன்களை உங்களுடன் வைத்துக்கொள்வதை விட, அதற்குக் கிடைக்கும் பெஸ்டான ரேட்டிற்கு விற்பனை செய்துவிட்டு, அந்த தொகையை வைத்து உங்களுடைய அடுத்த புது ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவதே சிறந்த ஷாப்பிங் முறையாகும்.
அம்சங்கள்
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 OS ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் 6.5 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீன் தெளிவுத்திறன் 1,080×2,400 பிக்சல்கள் மற்றும் இது MediaTek Dimensity 1200-Max செயலியில் வேலை செய்கிறது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் முதன்மை சென்சார் 50MP ஆகும்.
அதே சமயம் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளன. மறுபுறம், இது செல்ஃபிக்காக 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. பவர் பேக்கப்பிற்காக, இது 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.






