Oppo, தங்க டிராகன் முட்டையுடன் (Golden Dragon Egg) புதிய போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆப் தி டிராகன் (OPPO Reno 8 Pro House Of The Dragon Limited Edition) என்ற லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
லிமிடெட் எடிஷன்.!
இந்த ஸ்மார்ட்போன் ஓப்போ மற்றும் பிரபலமான ஹவுஸ் ஆஃப் தி டிராகனின் தயாரிப்பாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக உருவாகி இருக்கிறது. ஓப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆஃப் டிராகன் லிமிடெட் எடிஷன், தர்காரியன் ஹவுஸ் லோகோவைக் கொண்ட பிரத்தியேக லெதர் கவருடன் வருகிறது.
டிராகன் கிட்
இந்த Oppo போனுடன் ஒரு ‘தங்க டிராகன் முட்டை’யை நிறுவனம் வழங்குகிறது. இந்த போனின் பாக்சில் ‘டிராகன் வடிவ சிம் எஜெக்டர் பின்’, ‘டர்காரியன் சிகில் கீ செயின்’ மற்றும் டிராகன் சின்னம் கொண்ட ‘ஃபோன் ஹோல்டர்’ ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த போனுடன் கிடைக்கும் அணைத்து துணை கருவிகளும் டிராகன் சின்னம் மற்றும் டிராகன் உடன் தொடர்புடையதாக வருகிறது.
ஸ்பெஷல் எடிஷன்
இந்த போனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அப்படியே உள்ளது. ஆனால் வெளித்தோற்றம் மட்டும் மாறி இருக்கிறது. இந்தியாவில் ஓப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆப் டிராகன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை, மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.
சிறப்பம்சம்
Oppo Reno 8 Pro ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் முழு HD+ தெளிவுத்திறன் கொண்ட 950 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 25,00,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் 6.7 அங்குல AMOLED டிஸ்பிளேவை வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே பேனல் பஞ்ச் ஹோல் நாட்ச் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. இது MediaTek Dimensity 8100 Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
சிப்செட் & ஸ்டோரேஜ்.!
இந்த Dimensity 8100 Max ஆனது 5nm சிப்செட்டில் தயாரிக்கப்பட்டு Mali G610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 12GB LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் தனியுரிம ColorOS 12.1 உடன் வருகிறது.
கேமரா
இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கின்றன. இது 50MP Sony IMX766 பிரைமரி சென்சார் உடன் வருகிறது. இத்துடன் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் 32MP Sony IMX709 சென்சார் சார்ந்துள்ளது. இந்த Reno 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஆனது 4500mAh பேட்டரி உடன் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது USB 2.0 Type-C போர்ட்டை கொண்டுள்ளது.
தனித்துவம்
இது டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஆக்ஸ், என்எப்சி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், பெய்டோ, க்ளோனாஸ் போன்றவற்றை ஆதரிக்கிறது. பொதுவாகக் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை போல் அல்லாமல், ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition மாடலை இப்போதே வாங்கலாம்.
விலை
Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition ஆனது 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.45,999 விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. இந்த போனுடன் கிடைக்கும் தங்க முட்டையை ஷோகேஸ் பொருளாகப் பயன்படுத்தலாம். ஹவுஸ் ஆப் தி டிராகன் சீரிஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாகப் பிடிக்கும்.






