Home News ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?


ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன்படி Oppo Reno 8 மற்றும் Oppo Reno pro ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்த சீரிஸில் இடம்பெற்று இருந்தன. இதில் ரெனோ 8 மாடல் மட்டும் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

ரெனோ 8 போன் 6.43-அங்குல Full HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் Octocore MediaTek Dimensity 1300 SoC புராசஸரை கொண்டுள்ளது. மேலும் இது ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.

ரெனோ 8 மாடலில் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மாடல் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஷிம்மர் பிளாக் மற்றும் ஷிம்மர் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி. ஐசிஐசிஐ, எஸ்.பி.ஐ., மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் ஒப்பொ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ தளங்களில் தொடங்கப்பட இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 25-ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.