இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 8 சீரிஸ்


ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டிருந்து. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

வசதிகளைப் பொருத்தவரை ரெனோ 8 மாடல் 120Hz refresh rate உடன் கூடிய 6.43-அங்குல முழு HD+ AMOLED திரையையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.7 அங்குல திரையையும் கொண்டுள்ளது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் Octocore MedaiTek Dimensity 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ Octocore MedaiTek Dimensity 8100 மேக்ஸ் SoC புராசஸரையும் கொண்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மூன்று கேமரா செட் அப் உடன் வருகிறது.
இந்த மொபைல்கள் 80W fast charging support உடன் கூடிய 4500mAh பேட்டரியை கொண்டிருக்கின்றன. ரெனோ 8 மாடலின் 8GB + 128GB சேமிப்புத்திறன் கொண்ட போன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடலின் 12 GB + 256 GB சேமிப்புத்திறன் கொண்ட போன் விலை ரூ.45,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 மாடல் ஸ்மார்ட்போன் ஷிம்மர் ப்ளாக் (shimmer black) மற்றும் ஷிம்மர் கோல்டு (shimmer gold) நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அதேபோல் ரெனோ 8 ப்ரோ மாடல் கிளேசுடு பிளாக் (Glazed Black) மற்றும் கிளேஸ்டு கிரீன் (Glazed green) ஆகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ ரெனோ 8 வருகிற ஜூலை 25-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.