இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒப்போ நிறுவனம் அதன் Reno 9 சீரிஸ் போன்களை இன்று (நவம்பர் 24) சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் ஒப்போ ரெனொ 9, ஒப்போ ரெனோ 9 ப்ரோ, ஒப்போ ரெனோ 9 ப்ரோ ப்ளஸ் என்ற மூன்று மாடல்கள் வெளியாகி உள்ளன.
ஒப்போ ரெனோ 9
டிஸ்ப்ளே
ஒப்போ ரெனோ 9 மொபைலில் 120Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.7 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1080 x 2412 பிக்சல் அடர்த்தியையும் 409ppi தெளிவுத்திறனையும் கொண்டுள்ளது. சாதாரண நிலையில் 430 நிட்ஸ் வெளிச்சத்தனமையையும், HDR மோடில் 600 நிட்ஸ் வெளிச்சத்தன்மையையும் கொண்டு இருக்கிறது. மேலும் இது Corning Gorilla Glass பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
கேமரா
இதன் முதன்மை கேமராவாக 64 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கூடவே 8 மெகாபிக்ச்ல் அல்ட்ராவைடு கேமராவும், 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவும் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 4K @30 fps UHD வீடியோக்களை எடுக்க முடியும். மொபைலின் பின்பக்கத்தில் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தெளிவான வீடியோ அழைப்புகளையும், செல்ஃபி புகைப்படங்களையும் எடுக்க முடியும்.
சிப்செட் & இயங்குதளம்
இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 778ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது 2.4GTHz, உடைய ஆக்டா கோர் ப்ராஸசர் ஆகும். இந்த ஒப்பொ ரெனோ 9 மொபைல் ஆண்ட்ராய்டு 12ல் இயங்குகிறது.
மெமரி
இதில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் 7.6mm தடிமனையும், 185கிராம் எடையையும் கொண்டுள்ளது. கூடவே பாதுகாப்பிற்கு இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
நிறங்கள்
இந்த ஒப்போ ரெனோ 9 மொபைலானது tomorrow Gold, Haoyuehei, Slighly Drunk மற்றும் Black என 4 நிறங்களில் வெளியாகி இருக்கிறது.
பேட்டரி
இதில் 4500mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.
கனெக்டிவிட்டி
இது ஒரு 5ஜி போன் ஆகும். இதில் 5ஜி VoLTE, 4G, Bluetooth v5.3, WiFi, NFC, USB Type C v2.0 போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட வில்லை. அதே போல் FM ரேடியோ, வாட்டர் ப்ரூப் போன்ற வசதிகள் இல்லை.
விலை
இந்த ஒப்போ ரெனோ 9 மொபைலானது மூன்று வேரியண்டுகளில் வெளியாகி இருக்கிறது. அதாவது 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256 ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி. இதன் மூன்றின் விலைகளும் முறையே, இந்திய மதிப்புக்கு கீழ் கண்டவாறு வருகிறது.
8ஜிபி + 256ஜிபி = ரூ. 28,552
12ஜிபி + 256 ஜிபி= ரூ. 30,837
12ஜிபி + 512ஜிபி = ரூ. 34,265






