Home News 108MP கேமரா, 65W பாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8T 5G!

108MP கேமரா, 65W பாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8T 5G!

Highlights
  • ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த புதிய போன் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ சீரிஸில் 8டி என்னும் 5ஜி போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சமாக இதில் 108 மெகாபிக்சல் கேமராவும், 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் சொல்லலாம். மேலும் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளமான ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது. பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை

பெரிய டிஸ்பிளே ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல micro-curved AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 

சிப்செட் & இயங்குதளம்

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.

மெமரி

புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன்  மூலம் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

நிறங்கள்

இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

கேமரா

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.  செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.

பேட்டரி

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் இந்த போனை 45 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன்.

 

விலை

இந்தியாவில் ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ ஸ்டோர், பிளிப்கார்ட் போன்ற முன்னணி தளங்களில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சில சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.