மூன்று ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்த ஒப்போ

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்களில் OPPO நிறுவனமும் ஒன்று. பல்வேறு விலைப் பிரிவில் ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற 3 ஸ்மார்ட்போன்களுக்கு விலை ஒப்போ குறைப்பு செய்து இருக்கிறது.

OPPO F21 Pro, OPPO A55 மற்றும் OPPO A77 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களின் விலையையும் குறைத்துள்ளது. ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் புதிய விலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

OPPO A55

OPPO A55 ஸ்மார்ட்போனானது அக்டோபர் 2021 இல் அறிமுகமானது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இன் விலை ரூ.15,490 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இ்நத ஸ்மார்ட்போன் ரூ.14,499 என குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.17,490 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டாரி பிளாக் மற்றும் ரெயின்போ ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சம்

OPPO A55 ஸ்மார்ட்போனில் 6.55 அங்குல டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

ஒப்போ F21 Pro

ஒப்போ F21 Pro மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.22,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த மாடலின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒப்போ F21 Pro மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரூ.21,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 64 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஒப்போ ஏ77

அதேபோல் ஒப்போ ஏ77 மாடலின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 என தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

OPPO A77 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.56 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு இந்த டிஸ்ப்ளேயில் இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.