W5 Gen 1 சிப்செட் உள்ள உலகின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!

நீங்க ஸ்மார்ட் வாட்ச் பிரியரா? அப்போ, இந்த Oppo Watch 3 சீரிஸ் லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கானது தான். ஏனென்றால், இந்த ஸ்மார்ட்வாட்ச் Qualcomm Snapdragon W5 Gen 1 என்ற சிங்கிள் சிப் உடன் இயங்குகிறது. இந்த சிப்செட் உடன் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் வாட்ச் சாதனம்.

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சை Oppo நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த Oppo Watch 3 வரிசையில் Oppo Watch 3 மற்றும் Oppo Watch 3 Pro என்ற 2 மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை இரண்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 சிப்செட்டில் இயங்குகிறது.

விலை

இந்த ஸ்மார்ட் வாட்ச் டிவைஸில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இது 1GB RAM உடன் வருகிறது. சீனாவில் CNY 1,599 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 18,800 ஆகும். இது பிளாட்டினம் பிளாக் விட்டான் ஸ்ட்ராப் மாடலின் விலை ஆகும்.

அதேபோல், இதன் ஃபெதர் கோல்டு லெதர் ஸ்ட்ராப் மாடலின் சீன விலை CNY 1,699 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 20,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், Oppo Watch 3 Pro டிவைஸின் பிளாட்டினம் பிளாக் விட்டான் ஸ்ட்ராப் சீன விலை CNY 1,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 23,500 ஆகும். டெசர்ட் பிரவுன் லெதர் ஸ்ட்ராப் மாடலின் சீன விலை CNY 2,099 ஆகும். இந்திய மதிப்பில் இதில் தோராயமாக ரூ. 24,700 ஆகும்.

இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளும் தற்போது சீனாவில் உள்ள Oppoவின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ப்ரீ-புக்கிங் செய்யக் கிடைக்கிறது. இவை, ஆகஸ்ட் 19 முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.

Oppo Watch 3 Pro சிறப்பம்சங்கள்

Oppo Watch 3 Pro ஸ்மார்ட்வாட்ச் 378×496 பிக்சல்கள் உடன் 1.91′ இன்ச் LTPO கர்வுடு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon W5 Gen 1 மூலம் இயக்கப்படுகிறது. இது 1GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Oppo Watch 3 சிறப்பம்சங்கள்

Oppo Watch 3 ஸ்மார்ட்வாட்ச் 372×430 பிக்சல்கள் உடன் 1.75-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மற்ற அம்சங்கள் எல்லாம் அப்படியே ப்ரோ மாடலை போலவே உள்ளது. ஆனால், இது 400எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதே நேரம் ப்ரோ மாடல் 550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் இரண்டும் முழு சார்ஜ்க்கு 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 10 நிமிட சார்ஜ் நேரம் 24 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்ய இவை 65 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இவை 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது.

இந்தியாவுக்கு எப்போ வரும்?

இந்த ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவலை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், ஒப்போ நிறுவனத்தின் முக்கியமான விற்பனை சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பதனால், இந்த ஸ்மார்ட் வாட்ச் வெகு விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.