150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு!

Highlights

  • ஆட்டோ எக்ஸ்போ 20233ல் இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் இரு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
  • இவை ஒரு முழு சார்ஜ்க்கு 150கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டவை.

ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அதன் புதிய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

இரண்டு ஆட்டோக்கள்

அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோக்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றிற்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆட்டோக்களின் விலையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விலை

ஒஎஸ்எம் ம்யூஸ் மாடலுக்கு 4 லட்ச ரூபாயும், ஒஎஸ்எம் க்ரேஸ் மாடலுக்கு 4.20 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச விலைக்கு இவை இரண்டும் எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதும் இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களுமே காரணமாக இருக்கிறது.

 

வசதிகள்

இரண்டிலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் மானிட்டரிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

 

பேட்டரி & மைலேஜ்

இரண்டிலும் ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதை சார்ஜ் செய்ய 15A சாக்கெட்டே போதும். ம்யூஸ் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் அதிகபட்சமாக இரண்டு பேர் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 950 கிலோ வரையில் இது ஏற்றி செல்லும் திறன் கொண்டது. 8 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபுல் சார்ஜில் 150 கிமீ மைலேஜ் தரும். 4 மணி நேரத்தில் இதை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அம்சங்கள்

ஆட்டோ ஏசி, மிக தாராளமான லெக் ரூம் வசதி, இரவில் வானம் இருப்பதைப் போன்ற உட்பக்க மேற்கூரை என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டிருக்கும். ஐஓடி சிஸ்டம், டிஜிட்டல் க்ரூஸர், டூயல் எல்இடி ஹெட்லைட், 200 லிட்டர் பூட் ஸ்பேஸ், கட்டிங் எட்ஜ், மாடர்ன் ஏரோ டைனமிக் என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டுள்ளன. க்ரேஸ் இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 150 கிமீ மைலேஜ் ஆகும். மேலும், இது அதிகபட்சமாக மணிக்கு 46 கிமீ வேகத்தில் பயணிக்கும். நகரம் மற்றும் நடுத்தர கிராமங்களுக்கு ஏற்ற வாகனம் இது ஆகும்.

 

வடிவமைப்பு

மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இந்த வாகனத்தை ஒஎஸ்எம் உருவாக்கி இருக்கின்றது. கட்டிங் எட்ஜ், ஏரோடைனமிக் டிசைன் என தோற்றத்தில் இந்த வாகனம் கலக்கலாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஓர் வசதியான கார் மாடலைக் காட்டிலும் இது மிகவும் அழகானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது ஓஎஸ்எம் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஃபரிதாபாத்தில் உள்ளது. இங்கு வைத்தே நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களைத் தயாரிக்க இருக்கின்றது.

 

விற்பனை & டெலிவரி

இந்தியா மட்டுமின்று உலக நாடுகளுக்கும் இந்த மின்சார ஆட்டோக்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் சில வாரங்களில் இரு ஆட்டோக்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், அவற்றின் டெலிவரி பணிகள் மே 2023 இல் தொடங்க இருக்கின்றது.