PhonePe மூலம் நேரடியாக வருமான வரி செலுத்துவது எப்படி?

Highlights

  • சுயமதிப்பீடு மற்றும் முன்கூட்டிய வரி செலுத்த PhonePeஐப் பயன்படுத்தலாம்.
  • PhonePe வருமான வரி செலுத்துதலுக்கான UPI மற்றும் கிரெடிட் கார்டுகளை ஆதரிக்கிறது.
  • இந்த புதிய வசதி தனிநபர் மற்றும் வணிகங்களுக்கும் கிடைக்கிறது.

 

UPI, ரீசார்ஜ்கள், பில் பேமெண்ட்கள், இன்சூரன்ஸ் மற்றும் பலவற்றிற்கான ஆதரவுடன் PhonePe இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கட்டணப் பரிமாற்ற செயலிகளுள்  ஒன்றாகும். நாட்டின் வரி செலுத்தும் குடிமக்களை இலக்காகக் கொண்டு நிறுவனம் இப்போது ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. தடையற்ற மற்றும் சிறந்த கட்டண அனுபவத்தை வழங்கும் குறிக்கோளுடன் வருமான வரி செலுத்துதலுக்கான புதிய வசதியைச் சேர்த்துள்ளது. அதைப் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.

PhonePe வருமான வரி செலுத்தும் அம்சம்

PhonePe ஆனது அதன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாட்டில் புதிய வருமான வரி செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு மேலும் ஒரு முறையை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் சரியான நேரத்தில் மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவத்துடன் வருமான வரி செலுத்த முடியும்.

Phonepeயின் இந்த புதிய அம்சமானது, முன்னணி டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குநரான PayMate ஆல் இயக்கப்படுகிறது. மேலும் இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் கிடைக்கிறது. சுயமதிப்பீடு மற்றும் முன்கூட்டிய வரியை ஒரு சில தட்டல்களில் செலுத்த இதைப் பயன்படுத்தலாம். வருமான வரி செலுத்துவதற்கு UPI மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஆதரவு உள்ளது. கிரெடிட் கார்டு பயனர்கள் 45 நாள் வட்டியில்லா காலத்தைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் வங்கியைப் பொறுத்து பணம் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள் என்று PhonePe கூறுகிறது.

PhonePe நிறுவனத்தின் Head of Bill Payments மற்றும் Recharge Business தலைவர் நிஹாரிகா சைகல் கூறுகையில், “PhonePe இல், எங்கள் பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் சலுகைகளை தொடர்ந்து மேம்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். PhonePe செயலியில் வருமான வரி செலுத்தும் வசதியான எங்களின் சமீபத்திய அம்சத்தின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரிகளை செலுத்துவது பெரும்பாலும் சிக்கலான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் பணியாக இருக்கலாம், மேலும் PhonePe இப்போது அதன் பயனர்களுக்கு அவர்களின் வரிக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு தொந்தரவு இல்லாத மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது. நாங்கள் இப்போது செயல்முறையை எளிமையாகவும் எளிதாகவும் செய்திருப்பதால், எங்கள் பயனர்கள் வரி செலுத்தும் முறையை இது மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

PhonePe ஐப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது எப்படி?

  1. PhonePe செயலியைத் திறந்து, Recharge & Pay Bills பிரிவின் கீழ் Income Tax விருப்பத்தைத் தேடுங்கள்.
  2. உங்கள் வரி செலுத்தும் வகை, Self-assessment அல்லது Advance Tax மற்றும் assessment year-ஐ தேர்வு செய்யவும்.
  3. சரிபார்ப்புக்கு உங்கள் 10 இலக்க பான் கார்டு எண்ணை உள்ளிடவும்.
  4. உங்கள் வரித் தொகையை உள்ளிட்டு கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்லவும்.
  5. உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்வு செய்யவும்: UPI அல்லது கிரெடிட் கார்டு.
  6. செயலியில் payment successful செய்தி கிடைக்கும்.

 

வெற்றிகரமாக வரி செலுத்திய ஒரு நாளுக்குள் பயனர்கள் Unique Transaction Reference  (UTR) எண்ணைப் பெறுவார்கள் என்று PhonePe கூறுகிறது. வரி செலுத்தும் சலான் எண் வருவதற்கு இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.

புதிய PhonePe அம்சம் வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. PhonePe மூலம் வருமான வரிக் கணக்கை (ITR) நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. அதை நீங்கள் வருமான வரித் துறை இணையதளத்தில் செய்யலாம். 2022-2023 நிதியாண்டிற்கான உங்கள் ITR ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2023 ஆகும்.