
இந்தியாவில் நேற்று வெறும் ரூ.6499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன்.
இது கடந்த ஆண்டு உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி40 (Poco C40) ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்!
முக்கிய அம்சங்கள்!
போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த மொபைல் ஒரு பெரிய எச்டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா செட்டப், ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளைக் கொண்டுள்ளது.
ஸ்டோரேஜ் & விலை
போக்கோ C50 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவைகளின் விலை நிர்ணயம் முறையே ரூ.6,499 மற்றும் ரூ.7,299 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் (Country Green) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) என்கிற இரண்டு நிறங்களில் வருகிறது.
எங்கு கிடைக்கும்?
போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வருகிற ஜனவரி 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் மீது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI போன்ற சலுகைகள் கிடைக்கும். அறிமுகச் சலுகையாக ஃப்ளிப்கார்ட்டில் ரூ250 தள்ளுபடிக் கூப்பனும் வழங்கப்படும். இதனால் இந்த மொபைலை ரூ.6,249க்கு வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1 வருட வாரண்டியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் இன்-பாக்ஸ் ஆக்சஸெரீஸுக்கு 6 மாத வாரண்டி கிடைக்கும்!
டிஸ்பிளே
டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ சி50 ஸ்மார்ட்போனில், வாட்டர் டிராப் நாட்ச் டிசைனின் கீழ் 6.52 அங்குல அளவிலான டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே HD+ ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
ப்ராசஸர்
போக்கோ சி50 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஏ22 (MediaTek Helio A22) சிப்செட்டை பேக் செய்கிறது. இது 3GB வரையிலான ரேம் மற்றும் 32GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், உங்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதை பயன்படுத்தி 512ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்!
கேமரா
போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் கேமராக்களை பற்றி பேசும் முன், அதன் ‘லெதர் போன்ற” டிசைனை குறிப்பிட விரும்புகிறோம். இது நிச்சயம் ஒரு நல்ல பிடிமானத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 8MP மெயின் கேமரா + இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில், 5MP செல்ஃபிகேமரா உள்ளது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ரியர் மற்றும் செல்ஃபி கேமராக்கள் ஆனது 30fps என்கிற வேகத்தின் கீழ் 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவைகள் ஆகும்.
பேட்டரி
பேட்டரியை பொறுத்தவரை, இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது!
ரீபிராண்ட்
இது “முழுக்க முழுக்க” ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆகும். அதாவது இது ஏற்கனவே அறிமுகமாகிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தையும் போக்கோ பிராண்டிங்கின் கீழ் கொடுக்கிறது. அதனால் என்ன.. ரூ.6499-க்கு இவ்வளவு வசதிகள் கிடைக்குதேனு நினைக்கிறவங்க தாராளமா வாங்கலாம்.