
POCO நிறுவனம் தனது சமீபத்திய M சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான POCO M5 என்ற புதிய மாடலை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஸ்மார்ட்போன் POCO-வின் முந்தைய POCO M4 பட்ஜெட் ஸ்மார்ட்போனிற்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய POCO M5 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் முதல் துவங்குகிறது. அறிமுக விற்பனை என்பதனால், பல சலுகைகளுடன் இந்த மொபைலை குறைந்த விலையில் வாங்க முடியும்.
இந்த புதிய POCO M5 டிவைஸ் MediaTek இன் புதிய Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் Infinix Note 12 Pro ஸ்மார்ட்போனிற்கு பிறகு MediaTek-ன் இந்த புதிய சிப்செட்டை கொண்டிருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய POCO M5 இன்று மதியம் முதல் Flipkart வழியாகக் கிடைக்கும்.
விற்பனை மற்றும் விலை விவரங்கள்
இந்த போன் முதல் விற்பனை மற்றும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை ஒட்டி வருவதால், டெபிட் கார்டு சலுகைகளுடன் சில சிறப்புத் தள்ளுபடிகளையும் பெறலாம். POCO M5 இன்று மதியம் 1 மணிக்கு Flipkart வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் + 64ஜிபி உடன் ரூ.12,499 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல், இதன் 6ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.14,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதுமட்டுமின்றி இத்துடன் பல சலுகைகள் கிடைக்கிறது.
சலுகைகள்
குறிப்பாக, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. Flipkart Axis Bank கோ-பிராண்டு கார்டு மீது 8% தள்ளுபடி கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் டெபிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு EMI விருப்பம் மீது 10% தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ 1,000 வரை பொருந்தும். ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,000 வரை 10% தள்ளுபடி கிடைக்கிறது. இவை தவிர இலவச Disney+Hotstar மொபைல் பேக், கட்டணமில்லா EMI விருப்பங்கள் போன்ற பல சலுகைகளை இந்த முதல் விற்பனையின் மூலம் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறப்பம்சம்
POCO M5 மொபைல் 6.58 அங்குல IPS LCD முழு HD+ கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Widevine L1 ஆதரவுடன் வருகிறது. இந்த போன் MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Arm Mali G57 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. POCO M5 ஆனது 6ஜிபி ரேம் வரை LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இந்த சாதனம் 50MP பிரைமரி கேமராவுடன், 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது.
பேட்டரி & சார்ஜிங்
இந்த போக்கோ எம்5 மொபைலில் 5,000mAh பேட்டரி இருக்கிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த மொபைல் MIUI 13 இல் இயங்கும் Android 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதுதவிர இதில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், கேம் டர்போ 5.0, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டூயல்-பேண்ட் வைஃபை, 8.9 மிமீ தடிமன், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் புளூடூத் 5.3 ஆகியவை இருக்கிறது.
