Snapdragon 4 Gen 2 சிப்செட், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியானது POCO M6 Pro

Highlights

  • இந்தியாவில் POCO M6 Pro 5G இன் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது.
  • இந்த போன் அதிகபட்சமாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது.
  • இந்த போன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

POCO நிறுவனத்தின் POCO M6 Pro இன்று இந்தியாவில் வெளியானது.  இந்த 5G மொபைல் Snapdragon 4 Gen 2 சிப்செட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 5000mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கிறது. மூன்று வேரியண்ட்களில் வெளியாகி  இருக்கும் இந்த மொபைலின் இன்னொரு சிறந்த அம்சமாக இதன் 50MP முதன்மை கேமராவைச் சொல்லலாம். இதில் அதிகபட்சமாக 6GB RAM, 128GB வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த POCO M6 Pro மொபைலில் 6.79 அங்குல IPS LCD டிஸ்ப்ளே பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இது 396PPI பிக்சல் அடர்த்தியையும், 550 நிட்ஸ் வெளிச்சம், 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ ஆகியவை கிடைக்கின்றன. பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது. 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது.

 

வடிவமைப்பு

இந்த POCO M6 Pro மொபைல் பவர் பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது. மொபைலின் பின்பக்கத்தில் இருக்கும் கேமராக்கள் மற்றும் LED லைட் ஒரு செவ்வக வடிவ சட்டத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன.  இதில் Type-C போர்ட் ஆனது வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட் & இயங்குதளம்

இந்த POCO M6 Pro மொபைலில் Snapdragon 4 Gen 2 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி 2.2 GHz கடிகார வேகத்தில் வேலை செய்கிறது.  இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 இல் இயங்குகிறது. இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மொபைலுடன் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

 

கேமரா

POCO M6 Pro மொபைலின் பின்பக்கத்தில் முதன்மை கேமராவாக 50MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 2MP கேமரா ஒன்றும் உள்ளது. கூடவே  LED ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் வீடியோகால் மற்றும் போட்டோ எடுக்க  செல்ஃபி கேமரா ஒன்றும் இருக்கிறது.

 

பேட்டரி

இந்த POCO M6 Pro மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. IP53 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. அதன் உதவியுடன் நீர் மற்றும் தூசியிலிருந்து  பாதுகாக்கப்படலாம்.

மெமரி

POCO M6 Pro மொபைல் 4GB, 6GB என இரண்டு விதமான ரேம் மெமரியில் வருகிறது. அதுபோல் 64GB, 128GB என இரண்டு விதமான இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இவற்றின் கலவையில் இந்த மொபைலானது 4GB + 64GB, மற்றும் 6GB + 128GB என இரண்டு வேரியண்ட்களில் வருகின்றது.

மற்றவை

மற்ற அம்சங்களைப் பொருத்தவரை, டூயல் சிம் 5ஜி, 4ஜி, சைட் மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத், வைஃபை போன்ற பல வசதிகள் இந்த மொபைலில் உள்ளன.

 

விலை

4GB + 64GB  = ரூ. 10,999

6GB + 128GB = ரூ. 12,999

இந்த போன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. ICICI வங்கியின் அட்டையை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கிறது.