67W பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரியுடன் வெளியாகிறது Poco X5 5G

போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

இந்த புதிய போக்கோ போன் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

சிப்செட்

Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் சிறந்த செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

பேட்டரி

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ஏற்கனவே கூறியபடி இந்த போனில் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

கேமரா

64எம்பி டர்பிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

மெமரி

6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்தி இண்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

டிஸ்ப்ளே

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

5ஜி ஆதரவு, டூயல்-பேண்ட் வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.