Home News மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்!

மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்!

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது துணிவு பட விளம்பர பேனரை விமானத்தில் இருந்து குதித்து பறக்கவிட்ட நிகழ்வு துபாயில் நடத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அஜித் வழியில்… (Going A.K. way) 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதிய அறிவிபுடன் வருகிறோம்! என பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சில நாட்களுக்கு முன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.