
சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் ஆகிய இரண்டுமே அதிக விலைப் பிரிவில் வெளியான மொபைல்கள் ஆகும். இதனையடுத்து பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் அம்சங்களை பேக் செய்யும் போனாக ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) வெளியாக இருக்கிறது. இது ஒன்பிளஸ் நோர்ட் 2 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி (OnePlus Nord 2 & OnePlus Nord 2T) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாகிறது.
பவர்ஃபுல் பட்ஜெட் போன்!
ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் உள்ள மற்ற மாடல்களை போலின்றி, ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலானது வெறுமனே ஒரு பட்ஜெட் விலை போனாக மட்டுமில்லாமல், பவர்ஃபுல் அம்சங்களை பேக் செய்யும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.
டிஸ்ப்ளே
ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்செட்
இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 (MediaTek Dimensity 9000) சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளியாகும் எனத் தெரிகிறது.
மெமரி
12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம். இந்த போனில் ஸ்டோரேஜை எக்ஸ்டெண்ட் செய்யக்கூடிய விருப்பம், அதாவது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இடம்பெறாமல் போகலாம் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் இதில் ஒன்பிளஸ் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா
இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 50MP மெயின் சென்சார் + 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2MP மேக்ரோ சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா இருக்கலாம்.
பேட்டரி & சார்ஜிங்
ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.
விலை
விலையைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.27,999 ஆக இருக்கலாம். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையே நடக்கலாம்.







