Home News ஐபோன் 13, 12 மாடல்களின் மீது அதிரடி விலைகுறைப்பு!

ஐபோன் 13, 12 மாடல்களின் மீது அதிரடி விலைகுறைப்பு!

Apple நிறுவனம் நேற்று (செப்.7) இரவு நடந்த Far Out நிகழ்வில், அதன் புதிய ஐபோன் 14 சீரீஸ் போன்களை அறிமுகம் செய்தது. சுவாரசியமாக புதிய ஐபோன் மாடல்கள் அவற்றின் முந்தைய ஜெனரேஷன் மாடல்களின் விலையை ஒத்தே இருந்தன. இதற்கு உலகளாவிய பொருளாதார மந்தநிலையே காரணமாக இருக்கலாம்!

புதிய ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் மீது அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் பழமையான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் தற்போதைய விலை என்ன? ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் விலைக்குறைப்பு, தேர்ட் பார்ட்டி விற்பனையாளர்களை விட அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

iPhone 13-இன் புதிய விலை!

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மாடலை தற்போது ரூ.69,900 க்கு விற்பனை செய்கிறது. அதாவது அறிமுக விலையை விட ரூ.10,000 என்கிற குறைவான விலைக்கு பட்டியலிட்டுள்ளது. உடன் ஐபோன் 13 மினி மாடலின் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புகளுக்கு பின்னர் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற பட்டியல் இதோ!

iPhone 13 Mini-யின் புதிய விலைகள்

ஐபோன் 13 மினி 128 ஜிபி – ரூ 64,900
ஐபோன் 13 மினி 256 ஜிபி – ரூ 74,900
ஐபோன் 13 மினி 512 ஜிபி – ரூ 94,900

ஐபோன் 13 மாடலின் புதிய விலைகள்

ஐபோன் 13 128 ஜிபி – ரூ 69,900
ஐபோன் 13 256 ஜிபி – ரூ 79,900
ஐபோன் 13 512 ஜிபி – ரூ 99,900

iPhone 12 மீதும் விலைக்குறைப்பு!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடலின் விலையையும் குறைத்துள்ளது. iPhone 12 ஆனது இப்போது ரூ.59,900 முதல் வாங்க கிடைக்கிறது. ஐபோன் 12 ஆனது ரூ.69,900 க்கு விற்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் iPhone 12 Mini நிறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் அறிவித்துள்ள இந்த அதிகாரப்பூர்வமான விலைக்குறைப்புகள் உங்களின் ஆர்வத்தை தூண்டுகிறது என்றால்.. கொஞ்சம் பொறுங்கள்! ஏனெனில், மூன்றாம் தரப்பு ரீசெல்லர்கள் இதை விட அதிகமான சலுகைகளை வழங்குகின்றன; எடுத்துக்காட்டிற்கு ஐபோன் 13 மாடலை ரூ.65,000 க்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்.

விலை இன்னும் குறையும்!

பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் – நடக்கவிருக்கும் பண்டிகை கால விற்பனையின் போது – ஐபோன் 13 மீது இதைவிட அதிக தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ஐபோன் 13 மீது ரூ.15,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

iPhone 14 சீரீஸின் விலைகள் என்ன?

ஐபோன் 14 – ரூ.79,900
ஐபோன் 14 பிளஸ் – ரூ. 89,900.
ஐபோன் 14 ப்ரோ – ரூ.1,29,900
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் – ரூ.1,39,900

இந்த மாடல்கள் அனைத்துமே ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.