விரைவில் அறிமுகமாகிறது Realme C33


ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி சி33 (Realme C33) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த மாதம் இறுதிக்குள் ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறங்கள்

ரியல்மி சி33 (Realme C33) ஸ்மார்ட்போன் சாண்டி கோல்ட், அக்வா ப்ளூ மற்றும் நைட் சீ போன்ற நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

டிஸ்பிளே

ரியல்மி சி33 ஸமார்ட்போன் 6.6 அங்குல IPS LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கூடவே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

கேமரா

புதிய ரியல்மி சி33 ஸமார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை கேமராவாக 13MP கேமரா இருக்கிறது. இதுதவிர LED பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். செல்ஃபிகளுக்கும், வீடியோ அழைப்புகளுக்கும் என்றே 8MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சேமிப்புத்திறன்

ரியல்மி சி33 ஸமார்ட்போன் 3GB / 4GB ரேம் மற்றும் 32GB / 64GB / 128GB சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.மேலும் கூடுதல் சேமிப்புத்திறனுக்கு micro SD கார்டைப் பயன்படுத்த முடியும்.

பேட்டரி

5000mAh பேட்டரி மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ரியல்மி சி33 ஸமார்ட்போன் வெளிவருகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி33 ஸமார்ட்போன்.

பிராசஸர்

புதிய ரியல்மி சி33 போனில் Unisoc பிராசஸர் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் பயனர்கள் இந்த மாதம் இறுதிவரை காத்திருக்கவும். அதேபோல வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 9i 5G

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போனில் 6.7 அங்குல Full HD plus IPS LCD டிஸ்பிளே வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனில் 50MP ரியர் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
கூடவே இந்த போனில், 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6GB ரேம், 128GB சேமிப்புத்திறன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.