
தனது எண்ட்ரி லெவல் சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், சீனாவை தளமாகக் கொண்ட Realme கடந்த மாதம் இந்தியாவில் Realme C55 மொபைலை அறிமுகப்படுத்தியது. இப்போது, இந்நிறுவனம் புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போனான Realme C53 ஐ விரைவில் அறிமுகப்படுத்துவதில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. RMX3760 என்ற மாடல் எண்ணுடன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் தாய்லாந்தின் NBTC அங்கீகாரத்தை கடந்துவிட்டதாக டிப்ஸ்டர் முகுல் ஷம்ரா பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC), ஐரோப்பாவின் எரிசக்தி திறன் சான்றிதழ்கள் (EEC) மற்றும் இந்தோனேசியாவின் Tingkat Komponen Dalam Negeri (TKDN) உள்ளிட்ட பல சான்றிதழ் தளங்களில் இந்த மாடல் காணப்பட்டது. Realme C53 பற்றி அறியப்பட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
Realme C53 receives the NBTC certification and the EEC certification. RMX3761 has also received the Indian BIS certification.#Realme #RealmeC53 pic.twitter.com/cre9nWHbjF
— Mukul Sharma (@stufflistings) April 26, 2023
Realme C53 NBTC சான்றிதழ்
- NBTC ஒரு சுதந்திரமான அரசு நிறுவனம். இது தொலைத்தொடர்பு மற்றும் வானொலி தொடர்பு சேவைகளில் ரேடியோ அலைவரிசைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குகிறது மற்றும் விதிமுறைகளை நிறுவுகிறது.
- NBTC இன் தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பின்பற்றுவது, பயனர்கள் உயர் தரமான, பயனுள்ள, சரியான நேரத்தில், நம்பகமான மற்றும் நியாயமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
- பட்டியலின் படி, Realme RMX3760 Realme C53 ஆக அறிமுகமாகும், மேலும் இது 4G ஸ்மார்ட்போனாக இருக்கும்.
- Realme RMX3760 Realme 11 சீரிஸின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படும் என்று சில முந்தைய ஊகங்கள் தெரிவித்தன. இருப்பினும், அது உண்மையல்ல என்று தெரிகிறது.
- ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் இருப்பதை FCC பட்டியல் முன்பு உறுதிப்படுத்தியுள்ளது.
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கென இந்த போன் 33W SuperVOOC ஆதரவைக் கொண்டிருக்கும்.
- இதுதவிர வரவிருக்கும் Realme C53 பற்றி வேறு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.
கடந்த மாதம், ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme C55 மொபைலை அறிமுகப்படுத்தியது. இது iPhone 14 Pro-போன்ற ‘Mini Capsule’ உடன் வருகிறது. இது ரூ.10,999 முதல் கிடைக்கிறது. Realme C53 மொபைலும் இந்தியாவில் இதே போன்ற விலையில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்நிலையில், மே 10 ஆம் தேதி சீனாவில் Realme 11 சீரிஸை வெளியிடுவதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் சீரிஸில் Realme 11, Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியானவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.