

Realme தனது Realme C55 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மொபைல் ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியாகிவிட்டது. அதே மொபைல் தான் இன்று வெளியாகி இருக்கிறது. இதன் தோற்றத்தில் மாற்றம் இல்லை. ஆனால், ரேம் மற்றும் சேமிப்புத்திறனில் மாற்றம் இருக்கிறது. இன்று (மார்ச் 21, 2023) நடைபெறும் Realme C55 மொபைல் வெளியீட்டு நிகழ்வு ரியல்மியின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. Realme C55 ஸ்மார்ட்போனைப் பற்றிய விவரக்குறிப்புகள், அம்சங்கள், விலை போன்றவற்றை லைவில் பார்க்க விரும்பினால் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
அம்சங்கள்
64MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, சமீபத்திய் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் என பலதரப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இருக்கும் இந்த மொபைல், மிட்ரேஞ்ச் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இந்த Realme C55 மொபைலில் உள்ள அம்சங்கள் என்ன? விலை என்ன? எங்கு கிடைக்கும்? ஏதேனும் சலுகை இருக்கிறதா என்பதை இப்போது பார்க்கலாம்.
சிப்செட்
Realme C55 ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio G88 சிப்செட் உடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த மொபைல் ரெயினி நைட் (Rainy night), சன் ஷவர் (Sun shower) என இரண்டு வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.
பேட்டரி
இந்த புதிய Realme C55 ஸ்மார்ட்போனில் 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி யூனிட் இடம்பெற்றுள்ளது. இதனால் நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். அதே போல் ஏற்றி சார்ஜ் ஆனது நெடுநேரம் வரை நீடித்து நிற்கும். சார்ஜ் செய்ய டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
Realme C55 மொபைல் பின்பக்கத்தில் 64MP பிரைமரி ஷூட்டர் கேமரா, 2MP சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேவேளையில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் இந்த மொபைலின் முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மெமரி
இந்த Realme C55 மொபைல் மூன்று வேரியண்ட்களில் வெளியாகிறது.
4ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புத்திறன்
6ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புத்திறன்
8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறன்
இதில் இருக்கும் ‘Dynamic RAM’ அம்சத்தின் மூலம் மொபைலில் இருக்கும் பிசிகல் ரேமின் அளவைப் போல் டைனமிக் ரேமையும் அதிகரித்துக் கொள்ள முடியும். அதாவது 8ஜிபி ரேம் இருக்கும் மொபைல் வேரியண்ட்டின் ரேமை 16ஜிபி அளவுக்கு அதிகரித்துக் கொள்ள முடியும்.
அதேபோல் சேமிப்புத்திறனையும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
திரை
Realme C55 முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 90Hz LCD டிஸ்பிளேவைக் கொண்டு இருக்கும். இந்த டிஸ்பிளே பஞ்ச் ஹோல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதேபோல் Realme C55 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 6.52 அங்குல அளவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மினி கேப்சூல் அம்சத்தை வழங்கும். இது சார்ஜ் செய்யும் போது செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
வடிவமைப்பு
Realme C55 ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கிறது. இது மொபைலின் வலது விளிம்பில் இருக்கிறது. இந்த Realme C55 ஸ்மார்ட்போன் ஆனது பிளாட் எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 உடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விலை
4ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புத்திறன் = ரூ.10,999
6ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புத்திறன்= ரூ.11,999
8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறன்= ரூ.13,999
என்ற விலைக்கு இந்த Realme C55 மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.








