Home News மார்ச் 7ம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி C55!

மார்ச் 7ம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி C55!

Highlights
  • சி-சீரிஸ் ஸ்மார்ட்போனான Realme C55 பற்றிய தகவலை வெளியிட்டு, அதன் ரசிகர்களை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.
  • ரியல்மி நிறுவனத்தின் நிர்வாகி பகிர்ந்துள்ள டீஸர் படம் சன்ஷவர் வண்ண விருப்பத்தில் ஸ்மார்ட்போனைக் காட்டுகிறது

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் அடுத்து பட்டையை கிளப்ப போகும் ஒரு ஸ்மார்ட்போன் என்றால், அது ரியல்மி சி55 (Realme C55) மொபைலாக இருக்க போகிறது என்பதில் சந்தேகமில்லை. காரணம், இதன் விலைக்கேற்ற பல சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. Realme இறுதியாக அதன் வரவிருக்கும் சி-சீரிஸ் ஸ்மார்ட்போனான Realme C55 பற்றிய தகவலை வெளியிட்டு, அதன் ரசிகர்களை இப்போது டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. Realme துணைத் தலைவர் வரவிருக்கும் Realme C55 ஸ்மார்ட்போனுக்கான முதல் டீசரைப் பகிர அவர் சமூக ஊடக சேனலில் ஒரு புதிய பதிவை பதிவிட்டிருக்கிறார். ரியல்மி நிறுவனத்தின் நிர்வாகி பகிர்ந்துள்ள டீஸர் படம் சன்ஷவர் வண்ண விருப்பத்தில் ஸ்மார்ட்போனைக் காட்டுகிறது

 

வெளியீடு

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி, Realme C55 மார்ச் 7 ஆம் தேதி உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று கூறியுள்ளார். Realme C55 மொபைலின் இந்திய வெளியீடு பின்னர் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்திய அறிமுகத்திற்கான சரியாக தேதி இன்னும் தெரியவில்லை. Realme C55 இன் சில முக்கிய விவரக்குறிப்புகளையும், சிறப்பம்ச தகவலையும் குக்லானி வெளிப்படுத்தியுள்ளார்.

 

சிப்செட்

Realme C55 ஆனது MediaTek Helio G88 சிப்செட் உடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் ஆகும்.

பேட்டரி

வரவிருக்கும் இந்த புதிய Realme C55 ஸ்மார்ட்போனில் 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி யூனிட் இடம்பெறும். சார்ஜ் செய்ய டைப் சி போர்ட் வழங்கப்பட்டிருக்கும்.

 

கேமரா

Realme C55 மொபைல் பின்பக்கத்தில் 64MP பிரைமரி ஷூட்டர் கேமரா, 2MP சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த மொபைலின் முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கும்.

 

மெமரி

8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

திரை

Realme C55 முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 90Hz LCD டிஸ்பிளேவைக் கொண்டு இருக்கும். இந்த டிஸ்பிளே பஞ்ச் ஹோல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதை பழைய அன்பாக்சிங் வீடியோ ஒன்று வெளிப்படுத்தியது. அன்பாக்சிங் வீடியோவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, Realme C55 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 6.52 அங்குல அளவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மினி கேப்சூல் அம்சத்தை வழங்கும். இது சார்ஜ் செய்யும் போது செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

வடிவமைப்பு

Realme C55 ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கும். இது சாதனத்தின் வலது விளிம்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த Realme C55 ஸ்மார்ட்போன் ஆனது பிளாட் எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 உடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

விலை

இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ. 17,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.