Home List வருகிறது ரியல்மியின் பண்டிகை விற்பனை

வருகிறது ரியல்மியின் பண்டிகை விற்பனை

ரியல்மி நிறுவனம் வரும் 23ம் தேதி முதல் 30 வரை பண்டிகை தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சலுகை விற்பனையானது ரியல்மி இந்தியா இணையதளம் மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் நேரலையில் இருக்கும். அதேபோல் Flipkart Big Billion Days விற்பனையிலும் பல ரியல்மி போன்கள் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்க இருக்கிறது. புது ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரம்.

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது பண்டிகை தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதுமட்டுமில்லை பல மேம்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்களும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது. இதுமட்டும் இன்றி ரியல்மி ஜிடி நியோ சீரிஸ் ரியல்மி ஃபெஸ்டிவ் தின விற்பனையில் அதிகபட்ச தள்ளுபடியில் கிடைக்க இருக்கின்றன.

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என்ற விலைக்கு கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற பல ஜிடி தொடர் ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Realme GT Neo 3T

Realme GT Neo 3T என்பது சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் ரியல்மி ஃபெஸ்டிவ் தின விற்பனையில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.22,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999 எனவும் கிடைக்கும்.

அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.33,999 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,999 என கிடைக்கும்.

அதேபோல் இதன் உயர்நிலை வேரியண்ட் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.40,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Realme 9 Series தள்ளுபடி

ரியல்மி பெஸ்டிவ் தின விற்பனை மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை சிறந்த தள்ளுபடியுடன் வாங்கலாம். ரியல்மி 9 சீரிஸ் இன் மேம்பட்ட பதிப்பான ரியல்மி 9 ப்ரோ+ ரூ.24,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 என கிடைக்கும்.

ரியல்மி 9 ப்ரோ சலுகை

அதேபோல் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,999 எனவும் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.16,999 எனவும் கிடைக்கும். ரியல்மி ஃபெஸ்டிவ் விற்பனையில் ரியல்மி 9 5ஜி எஸ்இ மாடலின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,999 எனவும் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.16,999 எனவும் கிடைக்கும்.

Realme 9i ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ரூ.10,999 என கிடைத்த நிலையில் தற்போது ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட்டும் தற்போது இதே விலையில் கிடைக்கும். அதாவது ரியல்மி 9ஐ 5ஜி தற்போது ரூ.10,999 என கிடைக்கும்.

அதேபோல் ரியல்மி சி தொடரில் உள்ள ரியல்மி சி30, ரியல்மி சி11 2021, ரியல்மி சி30எஸ், ரியல்மி சி31, ரியல்மி சி33 மற்றும் ரியல்மி சி35 ஆகிய அனைத்து ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.2000 தள்ளுபடியை பெறுகிறது.