ரியல்மி போனுக்கு ரூ 9000 தள்ளுபடி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் தங்களது கேட்ஜெட்களுக்கு சில்லறை விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து Realme Festive Days என்ற பெயரில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையின் பகுதியாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

Realme Festive Days

Realme Festive Days விற்பனையில் ரியல்மி ஜிடி நியோ 3டி ரூ.9000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது அக்டோபர் 16 வரை மட்டுமே. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளத்தில் இந்த தள்ளுபடியைப் பெறலாம்.

தள்ளுபடி விலையில் ரியல்மி சாதனங்கள்

Realme Festive Days விற்பனையில் ரியல்மி சி தொடர் ஸ்மார்ட்போன்கள், நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ப்ரீமியம் ஜிடி ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதில் ரியல்மி சி தொடர் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. அதேபோல் இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பிற Realme AIoT கேட்ஜெட்களும் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது ரூ.9000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதிகபட்ச தள்ளுபடியில் Realme GT Neo 3T

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் போனின் ஒரிஜினல் விலை ரூ.29,999. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.31,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.33,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், சலுகையில் Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.20,999 என கிடைக்கிறது. அதாவது ரூ.9000 தள்ளுபடி இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு மாடல்களும், அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.22,999 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999 என்ற விலைக்கும் கிடைக்கிறது. ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுவாகும்.

பிளிப்கார்ட் இல் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கும் போது கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கிறது. புதிய Realme GT Neo 3Tக்கு வங்கிச் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி ஆனது அக்டோபர் 16 வரை மட்டுமே இருக்கும். ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

டூயல்-சிம் ஆதரவு கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இயங்குகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.62 அங்குல அளவிலான Full-HD+ (1,080×2,400 பிக்சல்ஸ்) E4 AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1,300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் பிளஸ் ஆதரவு உள்ளது. இதில் வெப்பத்தை முற்றிலும் குறைக்கும் வகையிலான டயமண்ட் தெர்மல் ஜெல்லுடன் கூடிய எட்டு கூலிங் லேயர்ஸ் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனானது 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங்

மொபைல் கேம் விளையாடுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஸ்மார்ட்போனாக, இந்த Realme ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட செயலி, மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக்ஸ் மற்றும் சிறந்த கேமரா அமைப்பு இதில் உள்ளது. Realme GT Neo 3T இன் சிறந்த அம்சங்களில் ஒன்று அதன் பேட்டரி. இரண்டு வேரியண்டுகளில் வரும் இந்த மொபைல் 4,500 mAh பேட்டரி உடனான 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000 mAh பேட்டரி ஆகிய இரு மாடல்களில் வெளியாகி இருக்கிறது.