
ரியல்மி நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் புதிய அம்சங்களுடன் புதிய மொபைல் ஒன்றை வெளியிட இருக்கிறது. ஷாவ்மி ரெட்மி டிஸ்கவரி எடிஷன் (Xiaomi Redmi Note 12 Discovery Edition) 210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்தது. அதே நேரத்தில் OnePlus மற்றும் Oppo ஆகிய 2 பிராண்ட்களும் தங்களின் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தின. இப்போது, Realme நிறுவனம் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதன் வரவிருக்கும் Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் மூலம் மற்ற பிராண்ட்களை ஆச்சரியப்பட செய்துவிட்டது. காரணம் என்னவென்றால், ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் ‘240W ஃபாஸ்ட் சார்ஜிங்’ ஆதரவைக் கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
அறிமுகம்
முதலில் இந்த மொபைல், பிப்ரவரி 27 அல்லது மார்ச் 2 ஆம் தேதிக்கு இடையில் பார்சிலோனாவில் திட்டமிடப்பட்ட MWC 2023 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில், வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9ம் தேதி 2 மணி அளவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது.
இரண்டு வகை சார்ஜிங்
இந்த டீசரில் நிறுவனம் அதன் Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அறிமுகம் செய்வதும் உறுதியாகியுள்ளது. இதைத் தவிர வேறெந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், டெக் வட்டார தகவலின் படி, Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் 240W மற்றும் 150W என்று இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதைத் தவிர, இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் உடன் 16GB ரேம் கொண்ட மாடலாக வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மொபைல் Android 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் மூலம் இயங்குவதாக TEENA தகவல் குறிப்பிடுகிறது. Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள்-கோர் சோதனையில் 1279 புள்ளிகளையும், மல்டி-கோர் சுற்றில் 3902 புள்ளிகளையும் பெற முடிந்தது என்று சமீபத்திய ரேட்டிங் தகவல்கள் குறிப்பிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதியில் இந்த போனிற்கு நிகரான பாஸ்ட் சார்ஜிங் வசதி எந்த போனிலும் இல்லை.
Realme GT Neo 5 சிறப்பம்சங்கள்
- ரேம் – 6 GB
- பராசஸர் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
- பின்பக்க கேமரா – 50 MP + 8 MP + 2 MP
- முன்பக்க கேமரா – 16 MP
- பேட்டரி – 5000 mAh
- திரை – 6.7 inches (17.02 cm)
- இயங்குதளம் – Android v13
- UI – Realme UI
- சேமிப்புத்திறன் – 128 ஜிபி
- 5G ஆதரவு – இல்லை (இந்திய பதிப்பில்)







