Home News Realme GT Neo 5 Pro இன் அம்சங்கள் சீன சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன

Realme GT Neo 5 Pro இன் அம்சங்கள் சீன சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன

Highlights
  • இந்த மொபைல் MIIT சான்றிதழைப் பெற்றுள்ளது
  • இரண்டு மாடல் எண்களில் இந்த மொபைல் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் இதில் இருக்கிறது

 

Realme  தனது ‘GT Neo’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாக பல செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. இது  Realme GT Neo 5 Pro என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மொபைல் போன் சீன சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது.  இதன் காரணமாக நிறுவனம் விரைவில் அதை அறிமுகப்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த மொபைல் தொடர்பான விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

Realme GT Neo 5 Pro சான்றிதழ் விவரங்கள்

 

புதிய Realme மொபைல் China Authority MIIT இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு வலைத்தளமான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனால் கண்டறியப்பட்டுள்ளது. RMX3820 மற்றும் RMX3823 ஆகிய மாடல் எண்களுடன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ள பட்டியலில் ஜூன் 2 தேதியிட்டது. தொலைபேசி தொடர்பான விவரக்குறிப்புகள் MIIT இல் வெளியிடப்படவில்லை. ஆனால் சான்றிதழைப் பார்க்கும்போது, ​​வரும் நாட்களில் நிறுவனம் அதை அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது.

 

Realme GT Neo 5 pro விவரக்குறிப்புகள்

 

சிப்செட்

கசிவுகள் மற்றும் பல்வேறு அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், இந்த Realme ஃபோனை Qualcomm இன் மிகவும் சக்திவாய்ந்த Snapdragon 8 Plus Gen 2 சிப்செட்டில் அறிமுகப்படுத்தலாம்.

 

ரேம் / மெமரி

இந்த ஃபிளாக்ஷிப் ரியல்மி போன் 16 ஜிபி ரேம் மெமரி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் LPDDR5x RAM மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தை காணலாம்.

 

திரை

Realme GT Neo 5 Proவில் 6.74-இன்ச் 1.5K திரை வழங்கப்படலாம். கசிவின் படி, இந்த ஃபோன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை ஆதரிக்கும் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2160pW டிம்மிங் அம்சத்தையும் கொண்டிருக்கும்.

 

இயங்குதளம்

அறிக்கைகளின்படி, இந்த Realme மொபைல், Realme UI 4.0 ஸ்கின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட Android 13 OS உடன் வெளியாகும்.

 

சார்ஜிங் & பேட்டரி

Realme GT Neo 5 Pro 100W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்படலாம். இதில் எத்தனை எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்பது இன்னும் வெளியாகவில்லை.

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக, OIS தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த போனில் 50-மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.