Realme GT Neo 5 SE ஆனது 16GB ரேம் மற்றும் 1TB சேமிப்பகத்தோடு வருவதை உறுதிப்படுத்தியது

Highlights

  • Realme GT Neo 5 SE ஆனது 16GB ரேம் மற்றும் 1TB சேமிப்பகத்தைப் பெறும்.
  • இந்த ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப்செட், 5,500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 144ஹெர்ட்ஸ் OLED டிஸ்ப்ளே ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • இது லாஸ்ட் ஃபேண்டஸி மற்றும் கருப்பு என இரண்டு வண்ண விருப்பங்களில் வரும்.

 

Realme அதன் GT Neo 5 SE 5G ஐ சீனாவில் இன்று அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி ஏற்கனவே மொபைலின் வடிவமைப்பு மற்றும் விளம்பர போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக, இந்த மொபைல் AnTuTu பட்டியலில் காணப்பட்டது. அதன்பின் வெளியீட்டிற்கு முன்னதாக மொபைலின் அதிகாரப்பூர்வ டீஸர் அதன் பேட்டரி மற்றும் சிப்செட் உட்பட அதன் பல்வேறு GT Neo 5 SE விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியது. இருப்பினும், இப்போது GT Neo 5 SE பற்றி இன்னும் சில விவரக்குறிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம்.

 

Realme GT Neo 5 SE விவரக்குறிப்புகள்

GT Neo 5 SE 5G ஆனது இப்போது Realme ஆல் 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB சேமிப்பக விருப்பத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 SoC மூலம் இந்த போன் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. Realme ஆனது  8GB மற்றும் 12GB RAM விருப்பங்களுடனும், 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்களுடனும் கைபேசியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிஸ்ப்ளே

Realme GT Neo 5 SE ஆனது 1.5k தெளிவுத்திறன் ஆதரவுடன் 6.74 அங்குல AMOLED டிஸ்ப்ளே, 1500Hz  உடனடி டச் சாம்ப்ளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் மற்றும்  முன்பக்க மேல் மையத்தில் ஸ்னாப்பர் ஹோல்-பஞ்ச் கட்-அவுட் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வரும் என்று கூறப்படுகிறது. GT Neo 5 SE வளைந்த ஓரங்களை உடைய வடிவமைப்பில் இதன் ஃப்ரேம் இருப்பதை  ரியல்மி ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.

ஃபோனின் AnTuTu பட்டியலானது GT Neo 5 SE பெற்ற புள்ளிகள் 1009127 மற்றும் ஆண்ட்ராய்டு 13 இன் சமீபத்திய அப்டேட்டில் இயங்கும் என்பதையும் வெளிப்படுத்தியது. பெட்டிக்கு வெளியே 100W வேகமாக சார்ஜ் செய்வதோடு 5500mAh பேட்டரி பேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கேமரா

கேமராவைப் பொருத்தவரை, Realme GT Neo 5 SE மொபைலின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், ஃபோனில் f/1.79 அப்பசருடன் கூடிய 64MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

 

realme GT Neo 5 SE முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 7 Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • திரை – 6.74 அங்குலம் (17.12 செமீ)
  • பின் கேமரா – 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 5500 mAh