
இதுவரை, Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போனின் வெளியீட்டைப் பற்றிய பல வதந்திகள் வெளியாகி உள்ளன. இந்த மொபைல் பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. அதன் Geekbench பட்டியல் கூட சிறிது காலத்திற்கு முன்பு காணப்பட்டது. இப்போது இந்த விஷயங்களை எல்லாம் அதிகாரப்பூர்வமாக்கி இருக்கிறது ரியல்மி. Realme, இன்று Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போனின் வருகையை சமூக ஊடக இடுகை மூலம் உறுதிப்படுத்தியது. இது ஒரு சப்-ஃப்ளாக்ஷிப் (sub flagship) மொபைலாக இருக்கலாம். இது இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே உள்ள விளம்பரச் சுவரொட்டியில் காணப்படுவது போல் (ரியல்மியால் ‘வெய்போ’வில் வெளியிடப்பட்டது), Realme GT Neo 5 SE விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவரை கசிவுகள் மற்றும் வதந்திகளுக்கு உள்ளான மொபைலின் மோனிகரில் இறுதியாக ரியல்மி அதிகாரப்பூர்வ முத்திரையை வைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, போஸ்டர் மொபைலைப் பற்றி வேறு எதையும் சொல்லவில்லை, மேலும் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றி தற்போது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வெளியீடானது அதிகாரப்பூர்வமானது. இருப்பினும் போஸ்டரானது மொபைல் விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்கிறது. இதனால், வரும் நாட்களில் கூடுதல் விவரங்களை ரியல்மி வெளிடும் என்று எதிர்பார்க்கலாம்.
Realme GT Neo 5 SE (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்
Realme GT Neo 5 SE மொபைலின் டிஸ்ப்ளேவானது, 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 1.5K AMOLED திரையைக் கொண்டிருக்கும். மேலும் இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்புத்திறனுடன் வெளியாகும்.
இயங்குதளத்தைப் பொறுத்தவரை, இந்த மொபைல் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 -அடிப்படையிலான RealmeUI 4.0 ஸ்கின்னோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைலின் பேட்டரியைப் பொறுத்தவரை, Realme GT Neo 5 SE ஆனது USB Type-C சார்ஜிங் போர்ட் மூலம் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இவை தவிர, பின்பக்கத்தில் 50MP + 8MP + 2MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கலாம்.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ – முக்கிய அம்சங்கள்
- சிப்செட் – குவால்கம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1
- ரேம் – 8 ஜிபி
- திரை – 6.74 அங்குலம் (17.12 செமீ)
- பின் கேமரா – 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
- செல்ஃபி கேமரா – 16 எம்.பி
- பேட்டரி – 5500 mAh