Home News 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறதா ரியல்மி ஜிடி நியோ 5?

240W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறதா ரியல்மி ஜிடி நியோ 5?

Realme நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. உலகளவில் இதன் அறிமுகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனானது 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme GT Neo 5

தற்போது இந்த போன் சீன சான்றிதழ் தளமான TENAA இல் தோன்றியுள்ளது. RMX3706 என்ற மாதிரி எண் உடன் தோன்றி இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 இன் வாரிசாக இந்த Realme GT Neo 5 மொபைல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 2,772 x 1,240-பிக்சல் அடர்த்தி கொண்ட 6.7 அங்குல 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா

அதேபோல் புதிய ரியல்மி போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என்றும் இதில் ஒன்று OIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி முதன்மை கேமரா சென்சாரைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

240 வாட்ஸ் சார்ஜிங்

ஆதரவு TENAA சான்றிதழ் தளம் சார்ஜ் செய்யும் நேரம் குறித்த தகவலை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகிறது. இதுவரை வெளியான போன்களில் ஐக்யூ 10 ப்ரோவில் மட்டும் தான் 200 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் 5000 எம்ஏஎச் பேட்டரியை 10 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதை வைத்து பார்க்கும் போது 240 வாட்ஸ் சார்ஜர் மூலம் ஸ்மார்ட்போனை 10 நிமிடத்திற்குள் சார்ஜ் செய்யலாம்.

பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 2425mAh திறன் கொண்ட இரண்டு செல்களும், 2,225mAh திறன் கொண்ட இரண்டு செல்களும் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 4,850mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

சிப்செட்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

சிறப்பம்சங்கள்

  • Qualcomm Snapdragon 8 Plus Gen 1 | 6 GB Processor
  • 6.7 inches (17.02 cm) டிஸ்ப்ளே
  • 50 MP + 12 MP + 5 MP முன்பக்க கேமராக்கள்
  • 16 MP செல்ஃபி கேமரா
  • 5000 mAh பேட்டரி
  • 240W பாஸ்ட் சார்ஜிங்