10 நிமிடத்தில் 100% சார்ஜ்!

Highlights

  • ரியல்மி நிறுவனத்தின் வசதியுள்ள ரியல்மி GT3 மொபைல் இந்தியாவில் வெளியானது.
  • இது 10 நிமிடத்திற்குள் முழுவதும் சார்ஜ் ஆகும்படி 240W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியாகி இருக்கிறது.

Realme GT3

இந்தியாவில் Realme GT3 என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் சில நாட்களுக்கு முன் வெளியான ரியல்மி நியோ 5 என்ற மொபைலின் மறுபதிப்பு ஆகும். இதில் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 ப்ராஸசர், 50MP கேமரா தவிர மேலே சொன்னது போல் 240W சார்ஜிங் வசதி என சில குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.

 

டிஸ்ப்ளே

இந்த மொபைல் 6.74 அங்குல, 1பில்லியன் கலர்களை வெளிப்படுத்தும் HDR10+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது 144Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 1400 nits வெளிச்சத்தன்மையையும் கொண்டுள்ளது. கூடவே 451ppi அடர்த்தியுடன் கூடிய 1240 x 2772 பிக்சல்களைக் கொண்டு 20:9 விகித்தில் வெளியாகி இருக்கிறது.

 

சிப்செட்

இந்த மொபைல் Snapdragon 8+ Gen 1 ப்ராஸசரைக் கொண்டுள்ளது. இதன் அட்ரினோ 730 ஆகும்.  மேலும் இது ஆண்ட்ராய்டு 13ன் மேல் ரியல்மியின் UI 4.0 ஸ்கின்னைக் கொண்டுள்ளது. இது ஒரு இரட்டை சிம் மொபைல் ஆகும்.

கேமரா

இந்த ரியல்மி ஜிடி3 மொபைலின் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், 8MP அல்ட்ராவைடு கேமராவும், 2MP மைக்ரோஸ்கோப் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4K வீடியோக்களைக்கூட எடுக்க முடியும். அதேவேளையில் முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 1080p வீடியோகளை எடுக்க முடியும். இது தவிர இந்த கேமராக்கள் HDR, பனோரமா போன்ற வசதிகளையும் கொண்டுள்ளன. இதுபோக ட்யூயல்-LED ட்யூயல் டோன் ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஷட்டர் கவுண்டிங் ஆப்ஷனைக் கொண்டுள்ளது.

 

மெமரி

இந்த ரியல்மி ஜிடி3 மொபைல்..

8ஜிபி ரேம் – 128ஜிபி சேமிப்புத்திறன்

12ஜிபி ரேம் – 256ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 256ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 512ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 1டிபி சேமிப்புத்திறன் என 5 வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.  இதில் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழங்கப்படவில்லை.

 

பேட்டரி

இதில் 4600mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 240W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20% சார்ஜினை 80 வினாடிகளிலும், 50% சார்ஜினை 4 நிமிடத்திலும், 100% சார்ஜினை 10 நிமிடங்களிலும் நிரப்பிக் கொள்ள முடியும்.

நிறங்கள்

199 கிராம் எடையுள்ள இந்த மொபைல் பர்ப்பிள், ப்ளாக் மற்றும் ஒயிட் என மூன்று வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

இந்த மொபைலின் பாதுகாப்புக்கு அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் பயபடுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ப்ளூடூத் 5.3, Wi-Fi, டூயல் பேண்ட் GPS, NFC, Infrared, Type C போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த மொபைலில் இருக்கிறது. 3.5mm ஆடியோ ஜாக், ரேடியோ இல்லை.

 

விலை

இந்த ரியல்மி GT3 மொபைலின் 8ஜிபி ரேம் – 128ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்டின் விலை இந்திய மதிப்புக்கு ரூ.53,605 ($649) ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.