
சமீபத்தில் பட்ஜெட் செக்மென்ட்டில் ரியல்மி அறிமுகம் செய்த போன் தான் புதிய Realme Narzo 50i Prime. இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான Realme Narzo 50i Prime இந்தியாவில் Amazon நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இது நாள் முதல் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்குமென்றாலும், அமேசான் Prime உறுப்பினர்களுக்கு இந்த போன் ஒரு நாளுக்கு முன்னதாக, இன்று முதல் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
வழக்கமான வாடிக்கையாளர்கள் நாளை, செப்டம்பர் 23, மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ சேனல்களில் இருந்து இந்த Realme Narzo 50i Prime மொபைலைப் பெறலாம். Realme இன் சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Realme GT Neo 3T, Flipkart வழியாக நாளை விற்பனைக்கு வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டும் தளங்களிலும் Realme போன்களை வாங்கலாம்.
விலை
Realme Narzo 50i Prime 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.7,999 என்ற ஆரம்ப விலையில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. அதேபோல், இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.8,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த 2 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் இப்போது பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கிறது.
கூடுதல் சலுகை
அமேசான் பிரைம் உறுப்பினராக இல்லதாக வாடிக்கையாளர்கள், நாளை மதியம் 12 மணி முதல் இந்த Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனை நேரடியாக அமேசான் தளத்தில் இருந்து வாங்கலாம். அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த போனின் மீது ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன், SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.
சிறப்பம்சம்
இந்த மொபைல் HD+ தெளிவுத்திறனுடன் 6.5 அங்குலம் கொண்ட 60Hz ரெப்ரெஷ் ரேட் உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் டிஸ்பிளே உடன் வருகிறது. Realme Narzo 50i Prime மொபைல் Unisoc T612 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது Mali-G57 GPU மூலம் ஆதரிக்கப்படுகிறது. Realme Narzo 50i Prime ஸ்டோரேஜ் விபரங்களை முன்பே பார்த்துவிட்டோம். இது மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை கூடுதல் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த Realme ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 OS உடன் வருகிறது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இது மொத்தமாக இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. ஒரு கேமரா முன்பக்கத்திலும், மற்றொரு கேமரா பின்பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்பக்கம் 5 மெகாபிக்சல் ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது 4G இல் இயங்கும் போனாகும். குறைந்த விலையில் புது போன் வாங்க ஐடியா இருந்தால், இந்த Realme Narzo 50i Prime நல்ல தேர்வாக இருக்கும்.
