புதிய Narzo ஸ்மார்ட்போனை டீஸ் செய்துள்ளது Realme: இது Narzo N53 என்ற பெயரில் விரைவில் வெளியாகலாம்.

Highlights

  • அமேசான் இந்தியா & ரியல்மியின் தளத்தில் இந்த போன் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
  • அறிக்கைகளின்படி, வரவிருக்கும் இந்த மொபைல் Norzo N53 என்ற பெயரில் வரும்.
  • Realme இதுவே மிக மெல்லிய ரியல்மீ ஃபோன் என்று கூறுகிறது.

 

Realme அதன் Narzo N சீரிஸின் முதல் மொபைலான Narzo N55வை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இந்நிறுவனம் இப்போது இந்த சீரிஸில் ஒரு புதிய மொபைலைக் கொண்டு வர தயாராகி வருகிறது. இதனையடுத்து அமேசானில் Narzo N தொடரின் புதிய கைபேசியை Realme டீஸ்  செய்துள்ளது. இது தவிர, வரவிருக்கும் இந்த போன் அதன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது .

டீசரின் படி, Realme இந்தியாவில் அதன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மொபைலை அறிமுகப்படுத்தும். இருப்பினும், டீசரில் மொபைலின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், சில அறிக்கைகளின்படி, வரவிருக்கும் மொபைல் Realme Narzo N53 ஆக இருக்கும். இது இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும். இது தவிர, ரியல்மி இது மிகவும் மெல்லிய ரியல்மி மொபைலாக இருக்கும் என்று கூறுகிறது.

Narzo N53 (எதிர்பார்க்கப்படும்) விலை, வேரியண்ட் & நிறம்

 

Realme Narzo N53 புதிய Realme Narzo N-சீரிஸில் இரண்டாவது மொபைலாக இருக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், Narzo N53 இன் விலை, வேரியண்ட்கள் மற்றும் வண்ண விருப்பங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

  • Realme Narzo N53 ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது இந்தியாவில் சுமார் ரூ.13,000 விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 4ஜிபி+64ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி என இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வரும்.
  • Realme Narzo N53 ஆனது Feather Black மற்றும் Feather Gold ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.
  • மொபைல் பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

 

இப்போது Realme Narzo N55 மொபைலின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Realme Narzo N55 இன் விவரக்குறிப்புகள்

டிஸ்ப்ளே

இது 6.72-இன்ச் FHD+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், தட்டையான விளிம்புகள், 91.4 சதவீதம் Body-Screen ratio, 180Hz Touch sampling rate, 680nits பிரகாசம் மற்றும் 1080X2400 பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

 

சிப்செட், ரேம் & மெமரி:

இந்த போனில் MediaTek Helio G88 SoC, 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB eMMC 5.1 சேமிப்பகம், மைக்ரோSD அட்டை வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய வசதி இருக்கிறது.

 

கேமரா

Realme Narzo N55 ஆனது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.79 அப்பசர்  கொண்ட 64MP முதன்மை கேமரா,  f/2.4 அப்பசர் கொண்ட 2MP B&W லென்ஸ் மற்றும் ஒரு LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 8MP ஷூட்டர் உள்ளது.

 

பேட்டரி மற்றும் OS:

பவர் பேக்கப்பிற்காக, இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மொபைலின் பேட்டரி வெறும் 29 நிமிடங்களில் 0-50 சதவீதமாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, ஃபோன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI 4.0 கஸ்டமைடு ஸ்கின்னில் இயங்குகிறது.

 

Realme Narzo N53 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – MediaTek Helio G80
  • ரேம் –  4 GB
  • டிஸ்ப்ளே – 6.72 அங்குலம் (17.07 செமீ)
  • பின்புற கேமராக்கள் – 50MP+2MP
  • செல்ஃபி கேமரா – 8MP
  • பேட்டரி – 5000mAh