ஸ்கை கிரே (Sky gray) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய இரு நிறங்களில் ரியல்மி நோட்புக் ஏர் லேப்டாப் அறிமுகமாகி இருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 (Gen core i3) புராசஸர் இடம்பெற்றுள்ளது.
ரியல்மி நிறுவனம் நோட்புக் ஏர் (Notebook Air) என்ற பெயரில் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த லேப்டாப்பின் சிறப்பம்சமே அதன் வடிவமைப்பு மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ மட்டுமே. இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்றால் அது, இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9mm. ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது. ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 GB RAM உடன் வரும் இந்த லேப்டாப் 256GB மற்றும் 512GB என இரண்டு சேமிப்புத்திறனோடு வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை வழங்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை (Screen to body ratio) கொண்டுள்ளது.
முழுவதும் மெட்டல் பாடியால் தயாரான இந்த லேப்டாப், 54W/hr பேட்டரி திறன் கொண்டதாகும். 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கிறது. இதன் 8GB + 256GB சேமிப்புத்திறன் கொண்ட லேப்டாப்பின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35, 300 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதன் 8ஜGB + 512GB சேமிப்புத்திறன் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.38,800 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.