விற்பனைக்கு வந்தது ரியல்மி நிறுவனத்தின் நோட்புக் ஏர் லேப்டாப்


54W பேட்டரி திறனுடன், முழு மெட்டல் பாடியாக வெளியாகி இருக்கிறது இந்த நோட்புக் ஏர் (Notebook Air) லேப்டாப். ஸ்கை கிரே (sky gray) மற்றும் ஐஸ் ப்ளூ (ice blue) ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ மட்டுமே. இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9mm. ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது. ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11 Gen core-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது.

8GB RAM உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256GB மற்றும் 512GB என இரண்டு சேமிப்புத்திறனுடன் வெளி வருகிறது. இதன் 16:10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை (Screen to body ratio) கொண்டுள்ளது.

முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும். 65W fast charging support இருக்கிறது. இதன் 8GB + 256GB சேமிப்புத் திறன் கொண்ட மாடலின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8GB + 512GB சேமிப்புத்திறன் கொண்ட மாடலின் விலை ரூ.38,800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் நேற்று முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.