மொபைல் கேலரியில் இருந்து டெலிட் செய்த படங்களை திரும்பப் பெறுவது எப்படி?

சில சமயங்களில் நாம் தவறுதலாக சில போட்டோக்களை ‘டெலிட்’ செய்து விடுவோம். அவற்றை எப்படி மீட்டு எடுப்பது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

http://https://www.91-cdn.com/hub/wp-content/uploads/2021/11/photo-recovery-how-to-feat.jpg

மொபைல் போனின் மெமரியை அதிகரிக்க தேவையில்லாத போட்டோக்களை நீக்குவோம். ஆனால், சில சமயங்களில் நாம் தவறுதலாக சில போட்டோக்களை ‘டெலிட்’ செய்து விடுவோம். அவற்றை எப்படி மீட்டு எடுப்பது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போனில் ‘டெலிட்’ செய்த போட்டோகளை மீட்டெடுப்பது எப்படி?

இது மிகவும் எளிது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கேலரி அல்லது போட்டோகளுக்கென தன போல்டர் ஒன்று இருக்கும். நம் மொபைலில் பார்க்கும் போட்டோகள், வீடியோக்கள் எல்லாம் இதில் தான் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த போட்டோகள் / வீடியோகளை டெலிட் செய்யும் போது அவை ‘Trash’ என்ற போல்டரில் போய் விழுந்து விடும்.
எனவே நீங்கள் தவறுதலாக டெலிட் செய்த போட்டோ / வீடியோகளை திரும்பப் பெற முதலில் இந்த ‘Trash’ போல்டருக்குச் சென்று பார்க்கவும்.

முதலில் மொபைலின் ‘Gallery’ஐ திறக்கவும்
அதில், மொபைலைப் பொருத்து ‘trash bin, Recently Deleted, Recycle bin’ போன்ற பெயரில் போல்டர் இருக்கும்.
அதை திறந்தால், உள்ளே நாம் இதுவரை டெலிட் செய்த போட்டோகள் இருக்கும்.
அதில் நாம் தவறுதலாக டெலிட் செய்த போட்டோக்களை தெரிவு செய்து, ‘recover’ அல்லது ‘restore’ என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்
இப்போது அந்த போட்டோகள் எந்த போல்டரில் இருந்து டெலிட் செய்யப்பட்டதோ அந்த போல்டருக்கே (எகா.: Camera, screenshots, twitter photos, etc.) அந்த போல்டருக்கே திரும்பியிருக்கும்
ஆனால், நாம் டெலிட் செய்த போட்டோ / வீடியோக்கள் இந்த ‘trash’ folderல் 30 முதல் 40 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். அதன் பின் தானாகவே மறைந்துவிடும்.

மோட்டரோலா, மைக்ரோமெக்ஸ், நோக்கியா போன்ற சில மொபைல்களில் Stock Android பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதில் Google Photos, கேலரியாக இருக்கும். அதனால் Google Photosன் trash folderஐயும் ஒருமுறை சோதித்துக் கொள்ளவும். இதனைச் செய்ய,
Google photosஐ திறந்துகொள்ளவும்
அதில் Navigation barல் இருக்கும் ‘Library’ tabஐ தேர்வு செய்யவும்
மேல் பக்கத்தில் இருக்கும் 4 தெரிவுகளில் ‘Bin’ என்பதைத் தெரிவு செய்யவும்
அங்கு இருக்கும் போட்டோகளில் உங்களுக்கு வேண்டிய போட்டோகளை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் நாம் டெலிட் செய்யும் போட்டோகள் நமது போனில் இருந்து முழுவதுமாக டெலிட் ஆகி இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் Google Photos Cloud backupல் அந்த படங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை அணுகி டெலிட்டான போட்டோகளை திரும்பப்பெற முடியும்.
இதேமுறையைப் பின்பற்றி ஐபோனிலும் டெலிட் செய்த போட்டோகளைத் திரும்பப் பெறலாம்.
ஆண்ட்ராய்டு போனில் Google Cloudக்கு பதில், iCloud பயன்படுத்தி போட்டோகளை மீட்டெடுக்கமுடியும்.